• May 16 2026

ஈஸ்வரியிடம் பாய்ந்து பேசிய ராதிகா.. பாக்கியா கொடுத்த அதிர்ச்சி!

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில், ஈஸ்வரி ராதிகாவிடம் இந்த குழந்தை வேண்டாம். கோபிக்கு பிள்ளைகள் இருக்கு, உனக்கும் பிள்ளைகள் இருக்கு என சொல்ல, குழந்தை எனக்கு வேணும். நான் பெத்துக் தான் போறேன் என சொல்லுகிறார்.

ஈஸ்வரி எவ்வளவு சொல்லியும் ராதிகா கேட்கவில்லை. இறுதியில் ஒன்றும் செய்ய முடியாமல் ஈஸ்வரி வந்து இருக்க, பாக்கியா வந்து என்ன நடந்தது என்று கேட்க, அவர் ஒன்றும் இல்லை என சொல்லுகிறார்.



எனினும், ஈஸ்வரி சொல்ல தயங்கி கொண்டு இருக்க, ராதிகா கர்ப்பமாக இருப்பது உங்களுக்கு தெரியுமா அத்தை என கேட்கிறார். உனக்கு தெரியுமா என ஈஸ்வரி கேட்க, ஆமா, ராதிகா தான் உங்க கிட்ட சொல்ல வேண்டாம் என சொல்லுகிறார். இதனை செல்வியும் கேட்டு விடுகிறார்.

அதன்பின் கோபி ரூம்க்கு செல்ல, ராதிகா அவரை புரட்டி எடுக்கிறார். மேலும் எனக்கு இந்த குழந்தை வேணும் என கத்துகிறார்.

இதை தொடர்ந்து பாக்கியாவிடம் செல்வி, நீ உண்மையில் தியாகி அக்கா. எப்படி எல்லாம் தெரிஞ்சும் இப்படி இருக்க என பேசுகிறார். இது தான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement