• Mar 29 2024

நடிகர் அஜித் மற்றும் விஜய் பற்றி கீர்த்தி ஷெட்டி ஒரே வார்த்தையில் கூறியது என்ன தெரியுமா?- சூப்பர் பதில் தான்

stella / 1 year ago

Advertisement

Listen News!


 லிங்குசாமி இயக்கத்தில், ராம் பொத்தினேனியுடன் இணைந்து கீர்த்தி ஷெட்டி நடித்த 'வாரியர்' படம் சமீபத்தில் வெளியாகிருந்தது. இப்படத்தில் விஸ்ரீ பிரசாத் இசையில், சிம்பு பாடி இருந்த புல்லட் பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது

இந்த பாடல் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் கீர்த்தி ஷெட்டி பிரபலமானார்.இந்த பாடலுக்கு இவருடைய நடனமும் வேற லெவலில் இருந்தது. இதனை அடுத்து தற்பொழுது வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிக்கும் புதிய படத்திலும், பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 'வணங்கான்' படத்திலும் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் நடிகை கீர்த்தி ஷெட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்டார்.


அப்போது ரசிகர்கள் அவரிடம் நடிகர் அஜித்குமார் & தளபதி விஜய் குறித்து கேள்வி எழுப்பினார்கள். ஒரு வார்த்தையில் இருவர் பற்றியும் குறிப்பிட கேட்டனர். இதற்கு பதில் அளித்த கீர்த்தி ஷெட்டி, "அஜித், Genuine Person என கேள்விப்பட்டுள்ளேன்" என கூறியுள்ளார். அதேபோல் நடிகர் விஜய் குறித்து, "Inspiring Superstar" என பதில் அளித்துள்ளார்.


மேலும் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு குறித்த கேள்விக்கு, "நிஜ வாழ்க்கையிலும் சினிமா வாழ்க்கையிலும் சூப்பர் ஸ்டார்" என பதில் அளித்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் குறித்த கேள்விக்கு, "Super Down to Earth" என பதில் அளித்துள்ளார். இவரின் இந்த பதிவு தற்பொழுது வைரலாகி வருவதைக் காணலாம்.



Advertisement

Advertisement

Advertisement