• May 20 2024

இவருக்கு பதில் இவர்.. ஜீதமிழ் சீரியலில் இன்று முதல் முக்கிய நடிகை மாற்றம்..!

Sivalingam / 1 week ago

Advertisement

Listen News!

பொதுவாக தொலைக்காட்சி சீரியலில் இவருக்கு பதில் இவர் என்று நடிகர் மாற்றம் செய்யப்படுவது சர்வ சாதாரண ஒன்று என்பதும் பல வருடங்களாக இது நடந்து கொண்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் தற்போது ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் ’இந்திரா’ என்ற சீரியலில்  காவியா என்ற கேரக்டரில் நடித்துக் கொண்ட ஜீவிதா விலகிவிட்டதாகவும் இன்று முதல் அவருக்கு பதிலாக வேறொரு நடிகை நடிக்கும் காட்சிகள் ஒளிபரப்பாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

’இந்திரா’ சீரியலில் நடித்த ஜீவிதா ஏற்கனவே ’சிங்க பெண்ணே’ சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் அதுமட்டுமின்றி ’தோழி’ என்ற புதிய சீரியலிலும் அவர் நாயகியாக நடிக்க கமிட் ஆகியுள்ளதை அடுத்து  அந்த சீரியலின் படப்பிடிப்பும் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஒரு சில திரைப்படங்களிலும் இவர் முக்கிய கேரக்டரில் நடத்தி வருகிறார் என்பதால் ’இந்திரா’ சீரியலுக்கு அவரால் கால்ஷீட் கொடுக்க முடியவில்லை என்றும் அதனால் தான் அதிலிருந்து அவர் விலகி விட்டதாகவும் தெரிகிறது. எனவே ’இந்திரா’ சீரியலில் காவியா கேரக்டரில் இருந்து ஜீவிதா விலகி விட்டதை அடுத்து அவருக்கு பதிலாக தாட்சாயினி என்பவர் இன்று முதல் இணைகிறார் என்று கூறப்படுகிறது.

இவர் ஏற்கனவே ஒரு சில ஜீ தமிழ் சீரியல் நடித்துள்ளார் என்பதும் குறிப்பாக ’நினைத்தாலே இனிக்கும்’ சீரியலில் தர்ஷினி கேரக்டரிலும் பொதிகை பொதிகையில் ஒளிபரப்பாகும் ’தாயம்மா’ சீரியலிலும் இவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இன்று முதல் காவ்யா கேரக்டரில் தாட்சாயினி நடிக்க இருக்கும் நிலையில் அவர் அந்த கேரக்டரை எப்படி மேனேஜ் செய்வார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement