• May 20 2024

முடிவுக்கு வருகிறது சன் டிவியின் ‘அருவி’ சீரியல்.. 2 சீரியல்கள் நேரம் மாற்றம்.. ஒரு புதிய சீரியல்..!

Sivalingam / 1 week ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ‘அருவி’ சீரியல் முடிவுக்கு வருவதை அடுத்து இரண்டு சீரியல்கள் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் ஒரு புதிய சீரியல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சீரியல் என்றாலே சன் டிவி என்று சொல்லும் அளவுக்கு சன் டிவியில் உள்ள அனைத்து சீரியல்களும் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது என்பதை தெரிந்தது. இந்த நிலையில் சன் டிவியில் 3 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த ‘அருவி’ என்ற சீரியல் தற்போது முடிவுக்கு வந்து விட்டதாகவும் இந்த சீரியலின் கிளைமாக்ஸ் கட்சியின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்ததாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் நடிகை அம்பிகா கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. இந்த நிலையில் ‘அருவி’ சீரியல் முடிந்ததும் அந்த சீரியல் ஒளிபரப்பாகும் 12 மணிக்கு ’மலர்’ சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. இதுவரை இந்த சீரியல் 3 மணிக்கு ஒளிபரப்பானது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ’ஆனந்த ராகம்’ சீரியல் இதுவரை 6:00 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த நிலையில் இனிமேல் 3 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் ராமாயணம் சீரியல் தொடங்க இருப்பதை அடுத்து அந்த சீரியல் மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகும் என தெரிகிறது.

எனவே இனிமேல் 12 மணிக்கு ’மலர்’ சீரியல்,  3 மணிக்கு ’ஆனந்த ராகம்’ சீரியல் மற்றும் 6:30 ’ராமாயணம்’ சீரியல் ஒளிபரப்பாகும் என்பதும் மற்ற சீரியல்கள் அந்தந்த நேரத்தில்தான் ஒளிபரப்பாகும் என்றும் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.

Advertisement

Advertisement