• Jan 19 2025

என்ன ஆச்சு ‘நாதஸ்வரம்’ பாண்டி கமல் மனைவிக்கு.. சர்ஜரி செய்யப்பட்டதா?

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

நாதஸ்வரம் என்ற சீரியலில் பாண்டி என்று கேரக்டரில் நடித்ததால் பாண்டி கமல் என்று அழைக்கப்படுபவரின் மனைவிக்கு திடீரென சர்ஜரி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் இது குறித்து அவரே பேட்டி ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார்.

‘நாதஸ்வரம்’ சீரியலில் நடித்ததின் மூலம் பிரபலமான சீரியல் நடிகர் பாண்டி கமல் அதன் பின்னர் ஆர்ஜே ,விஜே என கலக்கி வருகிறார் என்பதும் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பூவா தலையா’ என்ற தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் பாண்டி கமல் மனைவி மருத்துவமனையில் இருப்பது போன்ற வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருந்த நிலையில் அனைவரும் அவருடைய மனைவிக்கு என்ன ஆச்சு என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இது குறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார்.

தனது மனைவிக்கு வேறு ஏதும் பெரிய பிரச்சனை இல்லை என்றும், ஒரு கட்டி மட்டும் இருந்தது என்றும், அதற்காகத்தான் சர்ஜரி செய்தோம் என்றும் இப்போது எல்லாம் சரியாகிவிட்டது என்றும் கட்டியை டெஸ்ட்க்கு அனுப்பி டெஸ்ட் ரிப்போர்ட் பார்த்த நிலையில் அதுவும் நல்லபடியாக வந்ததால் எந்தவித பிரச்சனையும் இல்லை என்று பாண்டி கமல் கூறியுள்ளார்.  இன்னும் தனது மனைவிக்கு தையல் மட்டும் பிரிக்கவில்லை என்றும் மற்றபடி அவர் நன்றாக இருக்கிறார் என்றும் பாண்டி கமல் தனது மனைவியின் உடல்நிலை குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் ‘நாதஸ்வரம்’ சீரியல் குறித்து பாண்டி கமல் கூறியபோது ’15 வருடம் கழித்தும் கூட என்னுடைய கேரக்டர் இன்னும் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளது என்றும் கடவுள் நேரடியாக வந்து உதவி செய்யாமல் திருக்குமரன் சார் அவர்கள் மூலமாக வந்து எனக்கு உதவி செய்திருக்கிறார் என்றும் இந்த சீரியல் மூலம் தான் பிரபலமாகி தற்போது நான் ஒரு நல்ல நிலையில் உள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் என் மகள் பிறந்த நாளுக்காக திருமுருகன் அவர்களை அழைப்பதற்காக சென்றிருந்தேன் என்றும், அடுத்த சீரியலுக்காக ஸ்கிரிப்ட் எழுதும் பணியில் இருக்கிறார் அவரை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று மேனேஜர் கூறியதும் நான் திரும்பி வந்து விட்டேன் என்றும் ஆனால் அழைப்பே விடுக்கவில்லை என்றாலும் முதல் ஆளாக வந்து என் மகளுக்கு அவர் தங்க கம்மல் பரிசு கொடுத்தார் என்றும் ‘நாதஸ்வரம்’ சீரியல் இயக்குனர் திருமுருகன் குறித்து பெருமையுடன் நடிகர் பாண்டி கமல் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement