அபிஷன் ஜீவிந்த் – அனஸ்வரா ஜோடியாக நடித்துள்ள ‘வித் லவ்’ திரைப்படத்தை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா தயாரித்துள்ளார்.
கடந்த 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படம், பல காரணங்களால் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
முதன்முறையாக அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாக நடித்ததும், நீண்ட இடைவெளிக்குப் பிறகு சௌந்தர்யா தயாரிப்பாளராக மீண்டும் களமிறங்கியதும் அதற்கு முக்கிய காரணங்களாக அமைந்தன.
மதன் இயக்கத்தில் உருவான இந்த காதல் ஜானர் படம், ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஓரளவுக்கு பூர்த்தி செய்துள்ளதாக விமர்சனங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக அபிஷன் ஜீவிந்தின் நடிப்பு படத்தின் மிகப்பெரிய பலமாக பேசப்படுகிறது.
இந்த நிலையில், ‘வித் லவ்’ படம் முதல் நாளில் 1.4 கோடி, இரண்டாம் நாளில் 2.2 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. மூன்றாம் நாளில் மட்டும் 2.68 கோடி ரூபாய் வசூலித்து, மொத்தமாக மூன்று நாட்களில் 6.28 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
Listen News!