• Jan 19 2025

கஷ்டப்பட்டு உழைக்கும் பெண்களை தேடி பிடித்து தங்க காசு கொடுத்த ஆரி அர்ஜுன்! ஏன் தெரியுமா?

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் பிக்பாஸ் சீசன் 4இல் கலந்து கொண்டு டைட்டிலை வென்றவர் தான் ஆரி அர்ஜுனன். இவர் சக போட்டியாளர்கள் எல்லோரிடமும் கண்டிப்பாக இருந்தாலும் வெளியே இவருக்கு பெரிய நல்ல பெயர் இருந்தது. 

பிக்பாஸ் போட்டியாளர்களின் குடும்பத்தினர் கூட இவரை பார்த்த போது நன்றாக விளையாடுகின்றீர்கள் தம்பி என்று பாராட்டும் அளவிற்கு இவரின் ஆட்டம் அந்த சீசனில் மிகவும் சிறப்பாக இருந்தது.

பிக்பாஸை தொடர்ந்து ஆரி சினிமாவில் பெரிய ரவுண்டு வருவார் என்று ரசிகர்கள் பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, தற்போது நல்ல படங்களாக தெரிந்து எடுத்து, ஒரு சில படங்களில் நடித்து வருகிறார் ஆரி.


ஆரி அர்ஜுன், சேரன் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பின்,  நடிகை லட்சுமி மேனனுடன் புதிய படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி உள்ளார் .

இந்த நிலையில்,  பிக் பாஸ் புகழ் ஆரி அர்ஜுன் தனது அன்னையின் நினைவாக கஷ்டப்பட்டு உழைத்து குடும்பத்தை காப்பாற்றும் 10 பெண்களை தேடி அவர்களுக்கு தங்க நாணயத்தை பரிசாக  வழங்கியுள்ளார்.


அதாவது பெண்கள் ஒவ்வொருவருமே கொண்டாடப்பட வேண்டியவர்கள் தான் என்பதை வலியுறுத்தி தனது அம்மாவின் நினைவை போற்றும் வகையில் 'மாறுவோம் மாற்றுவோம்' என்ற  அறக்கட்டளையின் ஊடாக ஏழை வர்க்கத்தின் பின்னணியில் இருந்து பணியாற்றும் 10 பெண்களை சந்தித்து வாழ்த்து கூறியதுடன் அவர்களுக்கு தங்க நாணயம் ஒன்றையும் பரிசளித்துள்ளார்.


இவ்வாறு சமூக அக்கறையுடன் பணியாற்றி வரும் ஆரி அர்ஜுன், தனது அன்னையின் நினைவாக பெண்களுக்கு தங்க நாணயத்தை பரிசளிப்பது பற்றி அறிந்த மக்கள் பலரும் அவரை பாராட்டி வருகிறார்கள்.

அதன்படி சாலைகளை சுத்தம் செய்யும் பணியாளர் மூன்று பேருக்கும், தெருவோரத்தில் கூழ் கடை வைத்திருக்கும் பெண்கள் ரெண்டு பேருக்கும், பெட்ரோல் பங்க்கில் வேலை செய்யும் 3 பேர் மற்றும் பாத்திரம் கழுவும் பெண்கள் இரண்டு பேர் என  பலதரப்பட்ட பணியாளர்களை நேரில் சந்தித்து வாழ்த்து கூறி அவர்களுக்கு தங்க நாணயத்தை பரிசளித்துள்ளார் ஆர் அர்ஜுன்.

Advertisement

Advertisement