• Nov 04 2025

விவாதத்துக்கு முற்றுப்புள்ளி....!நாஞ்சில் விஜயன் மீது அளிக்கப்பட்ட புகார் வாபஸ்...!

Roshika / 1 month ago

Advertisement

Listen News!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் நகைச்சுவை நடிகராக வலம் வந்து, பெண் வேடங்களில் சிறப்பாக நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் பெயர் பெற்றவர் நாஞ்சில் விஜயன். இவர் கடந்த காலத்தில் மரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளது.


இந்த நேரத்தில், ஒரு திருநங்கை, நாஞ்சில் விஜயன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். புகாரின்படி, "5 வருடங்களாக நாஞ்சில் விஜயனுடன் காதல் வாழ்க்கையில் இருந்தேன். திருமணம் செய்யப் போவதாக நம்ப வைத்து, என்னை பாலியல் ரீதியாக பயன்படுத்தினார். திருமணம் ஆன பிறகும் தொடர்ந்தும் தொடர்பில் இருந்தார். ஆனால் இப்போது என்னை திருநங்கை என்ற காரணத்தை முன்வைத்து திருமணம் செய்ய மறுக்கிறார்" எனக் கூறினார்.


இந்த புகாரைத் தொடர்ந்து, வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையம் தீவிர விசாரணை மேற்கொண்டது. இந்நிலையில், சமீபத்தில் திருநங்கை தனது புகாரை வாபஸ் பெற்றுள்ளார். எந்தவிதமான நடவடிக்கையும் தேவையில்லை என்றும், இருவரும் சமாதானமாக பிரிந்துகொள்வதாகவும் அவர் எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்த வழக்கை வாபஸ் பெற்றதற்கான அதிகாரப்பூர்வ ஆவணத்தை, நாஞ்சில் விஜயன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Advertisement

Advertisement