• May 20 2024

பிரபல நடிகையின் தோற்றத்திற்கு ஆசைப்பட்டு அறுவைச் சிகிச்சை செய்த பெண்... ஆனால் மாறியது எப்படி..? வைரலாகும் புகைப்படம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை கொண்டு பலரும் பல விதமான செயல்களை செய்து வருகின்றனர். குறிப்பாக கவர்ச்சி உடையணிதல், உடலழகை மெருக்கூட்டுத்தல், எடையை குறைத்தல், முடியை கட் பண்ணுதல் எனப் பல விடயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.


அந்தவகையில் நடிகை போல மாற ஆசைப்பட்டு இளம்பெண் ஒருவர் 15 இடங்களில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட சம்பவம் தற்போது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தென்கொரியாவை சேர்ந்த 26 வயதான இளம்பெண் செர்ரி லீ (Cherri Lee) என்பவர் அழகாக நடிகைகளைப் போல் மாற வேண்டும் என ஆசைப்பட்டு 60 அமெரிக்க டாலர்கள் செலவு செய்திருக்கின்றார். அதாவது இலங்கை மதிப்பில் 2 கோடியே 15 லட்சம் மதிப்பில் செலவு செய்து உடலில் 15 இடங்களில் அறுவை சிகிச்சை செய்திருக்கின்றார்.



அதிலும் அவர் பிரபல நடிகையான கிம் கர்தாஷியனை போல் மாற ஆசைப்பட்டு இப்படி அறுவை சிகிச்சை செய்து இருப்பதாக கூறுகின்றார். அதற்காக உடலின் முகம், கண்கள், மார்பு, இடுப்பு மற்றும் பின்பகுதி என உடலின் பல இடங்களில் அறுவை சிகிச்சை செய்துள்ளார்.



இதுதொடர்பாக செர்ரி லீ கூறுகையில் “கிம் கர்தாஷியனை பார்த்து வளர்ந்தவள் நான். அவரைப் போலவே தோற்றமளிக்க வேண்டும் என விரும்பினேன். அவர் எப்போதும் எனக்கு ஓர் உந்துதலாக இருந்தவர். என் பார்வைக்கு உலகின் மிக அழகிய பெண்மணியாக தெரிந்தவர். நான் உண்மையில் முன்பு இருந்ததற்கும், தற்போது இருப்பதற்கும் முற்றிலும் வேறுபட்ட நபராக காட்சியளிக்கிறேன்" எனத் தெரிவித்திருந்தார்.



மேலும் "மேற்கத்திய பெண்ணாக தோன்றுகிறேன். எனது கொரிய குடும்பத்தினர் பலருக்கு என்னை அடையாளம் காணக்கூட முடியவில்லை. இதனை நான் முன்பே செய்திருக்க வேண்டும்” எனவும் கூறியிருக்கின்றார்.


இவரின் இந்த மாதிரியான தோற்றத்திற்கு பலரும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். அதுமட்டுமல்லாது அறுவைச் சிகிச்சைக்கு பின்னர் இவர் அசிங்கமாக தெரிவதாகவும், முன்னரே இவர் அழகாக இருந்ததாகவும் ஒரு சிலர் தமது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.   

Advertisement

Advertisement