• Nov 22 2024

எம்ஜிஆரை வைத்து மீண்டும் புதிய படம்..? இண்டஸ்ட்ரி ஹிட் கொடுக்க புதிய முயற்சியா? தீயாய் பரவும் வீடியோ

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

தொழில்நுட்பத்தின் வளர்ச்சி ஒருபக்கம் புதுபுது கண்டுபிடிப்புகளை கொண்டுவந்தாலும், மறுபக்கம் அதன் ஆபத்துகளும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. தற்போது மிகவும் டிரெண்டிங்கில் உள்ளது AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தான். 

இதைப்பயன்படுத்தி எந்த ஒரு புகைப்படத்தையோ, அல்லது வீடியோவையோ மார்பிங் செய்து ரியலானது போல் உருவாக்க முடியும்.ஒருவரின் குரலை தங்களின் தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ள முடியும்.


தற்போது, இந்திய சினிமாத் துறையில் பிரபலமான  நடிகைகளுக்கு பேரிடியாக வந்துள்ளது இந்த தொழிநுட்ப முன்னேற்றம்.  அண்மையில் தான் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப் பேக் வீடியோ ஒன்று  வைரலானது. இதன் போது திரையுலகமே ஒன்றுகூடி அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. அவரை தொடர்ந்து நடிகை கத்ரீனாவின் 'டைகர் 3' பட காட்சியை டீப் பேக் டெக்னாலஜி மூலம் தவறாக சித்தரித்து வெளியிட்டு இருந்தனர். இவரைத் தொடர்ந்து  நடிகை ஆலியா பட்டும் குறித்த சர்ச்சையில் சிக்கியுள்ளார்.


இந்த நிலையில், தற்போது A.I தொழிநுட்பம் மூலம் மறுபடியும் எம்ஜிஆரை வைத்து படம் எடுத்தால் அந்தப் படம் கண்டிப்பா இண்டஸ்ட்ரி ஹிட் அடிக்கும் என சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது.

இந்த தொழிநுட்பம் நடிகைகளுக்கு தலைவலியாக காணப்பட்டாலும், இதில் நன்மை என்றால் அது பழங்கால நடிகர்களை மீண்டும் இதன் மூலம் உயிர்பிக்கலாம் என்பது தான்.. எனினும், எதிர்வரும் காலங்களில் அதுவும் சாத்தியம் ஆகுமா இல்லையா என பொறுத்து இருந்து பார்ப்போம்..



Advertisement

Advertisement