தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் சமீபகாலமாக டிக்டாக் என்ற செயலி மூலம் பிரபல்யமானவர்கள் தான் அதிகளவாக மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளதோடு பல திரைப்படங்களில் மற்றும் சீரியல்களில் நடித்து வருகின்றனர்.
அந்த வகையில் இவ்வாறு டிக்டாக் செயலி மூலம் பிரபல்யமான முக்கிய பிரபலம் தான் ஜி.பி முத்து . தன்னுடைய ஊர் வழக்கத்தில் அவர் பேசும் பேச்சுக்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.இதனால் பல திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்று நடித்து வந்தார்.
இது தவிர தற்பொழுது சுவாரஸியமாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்திருந்த இவர் திடீரென தனது பிள்ளைகளின் நினைவு வந்து விட்டது. என்னை வெளியே அனுப்பி விடுங்கள் என கோரிக்கை வைத்திருந்தார்.
இதனால் இவரின் ஆசையை நிறைவேற்றி கமல்ஹாசன் அவரை வெளியே அனுப்பி வைத்து விட்டார்.இதனால் தலைவர் எப்போது பிக்பாஸ் வீட்டுக்குள் ரீ என்ட்ரி கொடுப்பார் என ரசிகர்கள் காத்திருக்கின்றர். இந்த நிலையில் ஜி.பி முத்து புதிய கார் ஒன்றை ஓட அவரை அவரது நண்பர்கள் ஏமாற்றும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரவி வருவதைக் காணலாம்.
Listen News!