• Mar 29 2024

துணிவு படத்தின் கதாநாயகி கொடுத்த சூப்பர் அப்டேட்- அடடே இந்த வேலை எல்லாம் ஆரம்பிச்சாச்சா

stella / 1 year ago

Advertisement

Listen News!

அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகவுள்ள திரைப்படம் தான் துணிவு. நடிகர் அஜித்குமார் இப்படத்தில் நடித்து வருவதோடு இப்படத்தை இயக்குநர் எச்.வினோத் இயக்கியுள்ளார். இப்படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார் என்பதும் முக்கியமாகும்.


இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசையமைத்து வருகிறார்.இப் படத்தின் போஸ்டர்கள் கூட அண்மையில் வெளியாகி, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது.இப்படத்தில் கதாநாயகியாக மலையாள நடிகை மஞ்சுவாரியார் நடித்து வருகின்றார்.


இன்னும் இரண்டு மாதங்கள் கழித்து திரைப்படம் வெளியாக உள்ளதால் துணிவு படத்தின் அப்டேட்டை எதிர்நோக்கியும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.இந்த நிலையில், துணிவு படத்தில் நடித்துள்ள மஞ்சு வாரியர் புதிய அப்டேட் ஒன்றையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொடுத்துள்ளார். 

அதாவது தற்போது துணிவு படத்திற்காக டப்பிங்கில் தான் ஈடுபட்டுள்ள புகைப்படம் ஒன்றையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனால் ரசிகர்கள் செம குஷியில் உள்ளர். மேலும் மஞ்சுவாரியார் இது தவிர தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படம் மூலமே தமிழில் அறிமுகமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement

Advertisement