• Jan 18 2025

அசுர வளர்ச்சியில் மனோஜ்.. மீனாவை அசிங்கப்படுத்தி நொண்டியான ரோகிணி

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை எபிசோட் இன்றைய எபிசோடில், மனோஜூம் ரோகிணியும் புதிதாக கார் வாங்குகின்றார்கள். வீட்டு வாசலில் நின்று மனோஜ் விஜயாவுக்கு போன் பண்ணி ஆரத்தி எடுத்து வருமாறு கூறுகிறார்.

இதனால் விஜயா சந்தோஷப்பட்டு வீட்டில் இருந்த எல்லாரையும் அழைத்துக் கொண்டு மனோஜ்க்கும் ரோகிணிக்கும் ஆர்த்தி எடுக்கின்றார். காரை பார்த்த முத்து இதுக்கு நாலு லட்சம் ரொம்ப கூட ரெண்டு லட்சம் கொடுக்கலாம். நல்லா ஏமாந்துட்டா என்று சொல்லுகிறார்.

அண்ணாமலையும் இப்போ என்னத்துக்கு கார் வாங்கினான்னு கேட்க, பிசினஸ் விஷயமா பேச போகும்போது ஆட்டோலயும் பஸ்லயும் போக முடியாது. அதனால வாங்கினேன் என்று சொல்ல, என்ன பிசினஸ் செய்யப் போறா என்று அண்ணாமலை கேட்க, இனி தான் அதை பற்றி ஜோசிக்க வேண்டும் என்று சொல்லுகிறார்.

இதையடுத்து கார் வாங்கினதுக்கு பார்ட்டி இல்லையா என்று  ரவியும் முத்துவும் கேட்க,  இரவு பார்ட்டி வைக்கிறார் மனோஜ். ஆனால் முத்து தான் குடிக்கவில்லை என்று சொல்கிறார்.


மறுபக்கம் கிச்சனில் ஸ்ருதி, மீனா, ரோகிணி பேசிக்கொண்டிருக்க ரோகிணியும் ஸ்ருதியும், ரவியும் மனோஜ் தங்களிடம் சொல்லிட்டு தான் குடிக்க போறாங்க என்று சொல்ல, முத்து உங்களிடம் சொல்லவில்லையா என்று ரோகினி மீனாவை அசிங்கப்படுத்துகிறார். அதற்கு மீனா இன்றைக்கு அவர் குடிக்க மாட்டார் என்று தோணுது என்று சொல்கிறார். ஆனாலும் முத்து தான் குடிச்சு நடக்க முடியாமல் நடந்து வருவார் என சொல்லுகிறார் ரோகிணி.

இன்னொரு பக்கம் ரவியும் முத்துவும் மனோஜ்க்கு பிசினஸ் செய்வதற்கு ஐடியா கொடுக்க அவர் எதையும் பிடிக்கவில்லை என்று சொல்லுகிறார். இறுதியாக அவர் குடித்துவிட்டு நடக்க முடியாமல் வர ரவியும் முத்துவும் தூக்கிக்கொண்டு வருகிறார்கள். 

முதலில் முத்து வருவதை பார்த்துவிட்டு ரோகிணி மீனாவை நக்கலாக பார்த்து சிரிக்க பின்னாடியே மனோஜ் தள்ளாடி கொண்டு வருகிறார். இதை தொடர்ந்து மனோஜ் அலப்பறைகள் செய்ய ரோகிணி ரூம்க்கு அவரை அழைத்துச் செல்கின்றார் இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement