• Jan 19 2025

கோபிக்கு ராதிகா கொடுத்த அதிர்ச்சி.. பாக்கியா செய்த காரியம்

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது.

அதில், ஈஸ்வரி கிச்சனுக்கு வந்து சூடு தண்ணி கேட்க, நீங்க நைட்டு தூங்கலையா என்று பாக்கியா கேட்க, அதெல்லாம் இல்லை நல்லாத்தான் தூங்கினேன் என்று சொல்கிறார்.

அதற்கு செல்வி என்ன சந்தோஷத்தில் தூக்கம் வரலையா என்று கேட்க. அவரை வாயை மூடிட்டு இருக்குமாறு கோபப்படுகிறார். மேலும் இந்த விஷயத்தை ஊரு முழுக்கு டமாரம் அடிக்காதே என்று சொல்ல, இனியா குழந்தையாக இருக்கும் போது இருந்தே இருக்கன்.  நானும் இந்த வீட்டில் ஒரு மாதிரி தானே என்று சொல்கிறார் செல்வி.

அதன் பிறகு பாக்யாவை கூப்பிட்டு உனக்கு கஷ்டமா இருக்கும் என்று எனக்கு தெரியும் ராதிகாவுக்கு இந்த குழந்தை எல்லாம் பிறக்காது நான் விடமாட்டேன் என்று சொல்ல, நான் எதுக்கு கவலைப்பட போறேன். நானா பிள்ளை பெத்துக்க போறேன் என்று சொல்ல, செல்வி சிரிக்கிறார். அதன்பின் ஈஷ்வரி கோபி பாவம் என்று பேச்சை ஆரம்பிக்க எனக்கு வேலை இருக்கு என்ன மன்னிச்சிடுங்க என்று கிளம்புகிறார் பாக்கியா.


அதன் பின்பு கோபி வாக்கிங் சென்றுவிட்டு வீட்டுக்குள் நுழைய, இன்றைக்கு எல்லார்கிட்டயும் விஷயத்தை சொல்றேன் என்று ராதிகாக்கு சொன்னது ஞாபகம் வருது. அங்கு வந்து பார்த்தபோது எல்லாரும்  ஹாலில் உட்கார்ந்து சந்தோஷமாக சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள் இதனால் சொல்லாமல் போகின்றார்.

அங்கு வந்த கோபியிடம் எல்லார்கிட்டயும் சொல்லிட்டீங்களா என்று ராதிகா கேட்க , எப்படி சொல்றது எல்லாரும் சந்தோஷமா இருக்காங்க. இதுல நான் எப்படி சொல்லி அவங்களை கஷ்டப்படுத்துற என்று சொல்ல, உங்களுக்கு உங்க குடும்ப சந்தோஷம் தானே முக்கியம் என்று ராதிகா கோபப்படுகிறார்.

மேலும் நீங்க இன்டைக்கு சொல்லவில்லை என்றால் நான் எல்லார்கிட்டயும் சொல்லிட்டு கிளம்பி போயிட்டே இருப்பேன் என்று சொல்ல, நான் இன்னைக்கு நைட்டுக்குள்ள சொல்லுறேன் எனக்கு டைம் கொடு என்று கோபி சொல்லுகிறார். இது தான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement