• Jan 19 2025

"பெங்கல் புயல்"..! திரையரங்கு உரிமையாளர்கள் எடுத்த அதிரடி முடிவு...

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

கடந்த சில நாட்களாக பெங்கல் புயலால் தமிழகம் முழுவதும் மழை, வெள்ளம் என கொட்டித்தீர்க்கிறது. மேலும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், போன்ற மாவட்டங்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புயல் காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதோடு, மோசமான வானிலை காரணமாக விமான சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. பேருந்து சேவைகள் புயல் மற்றும் மழையின் தாக்கத்தை பொறுத்து நிறுத்தப்படும் என நேற்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.


இந்நிலையில் மக்களின் பாதுகாப்பு கருதி , திரையரங்குகள் உரிமையாளர்கள் புயல் காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் திரையரங்குகள் மூடப்படும் என தெரிவித்துள்ளனர். டிக்கெட் முன் பதிவுகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஒரு வேலை புஷ்பா 2 திரைப்படமும் தள்ளி  போகுமா என்று தமிழக ரசிகர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். 





Advertisement

Advertisement