• Oct 05 2024

6 மாதங்களில் 6 ஹிட் படங்கள் தான்.. ரிலீஸ் ஆனதோ 124 படங்கள்.. கோலிவுட்டின் பரிதாபம்...

Sivalingam / 3 months ago

Advertisement

Listen News!

2024 ஆம் ஆண்டில் ஆறு மாதங்கள் தற்போது முடிவடைந்துள்ள இடம் இந்த ஆறு மாதங்களில் தமிழில் மட்டும் 124 திரைப்படங்கள் வெளியாகி உள்ளது. ஆனால் இவற்றில் ஆறு படங்கள் மட்டுமே நல்ல வெற்றியை பெற்றுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் கோலிவுட் திரையுலகை அதிர்ச்சி கொள்ளாக்கி உள்ளது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மூன்று அல்லது நான்கு திரைப்படங்கள் வெளியான போதிலும் ஒரு மாதத்திற்கு ஒரு படம் மட்டுமே ஹிட்டாகி உள்ளது.

2024 ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களில் நல்ல வெற்றி பெற்ற படங்கள் என்று பார்த்தால் ’அரண்மனை 4’ ’மகாராஜா’ ’கருடன்’ ’மிஷன் சாப்டர் ஒன்’ ‘கேப்டன் மில்லர்’ மற்றும், ’அயலான்’ ஆகிய திரைப்படங்கள் நல்ல வெற்றியை பெற்றுள்ளன. ’அயலான்’, ’கேப்டன் மில்லர்’ ஆகிய படங்கள் வசூலில் வெற்றி பெற்றாலும் விமர்சன ரீதியாக நெகடிவ்வாக பார்க்கப்பட்டது.

இந்த ஆண்டில் 124 படங்கள் வெளியான போதிலும் பல படங்கள் மண்ணை கவ்வின என்பதும் குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’லால் சலாம்’ விஷால் நடித்த ’ரத்னம்’ விஜய் ஆண்டனி நடித்த ’ரோமியோ’ ஜிவி பிரகாஷ் நடித்த ’கள்வன்’ ஜெயம் ரவி நடித்த ’சைரன்’ உள்ளிட்ட படங்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி படுதோல்வி அடைந்த படங்களாகும்.

அதே போல் பா ரஞ்சித் தயாரிப்பில் உருவான ’ப்ளூ ஸ்டார்’ மணிகண்டன் நடித்த ’லவ்வர்’ கவின் நடித்த ’ஸ்டார்’ உள்ளிட்ட படங்கள் ஓரளவு சுமாரான வசூலை பெற்று நஷ்டம் இல்லாத படங்கள் பட்டியலில் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் ஆறு மாதங்கள் சோதனையான மாதங்களாக இருந்தாலும் இனி அடுத்து வரும் ஆறு மாதங்கள் கோலிவுட் திரை உலகிற்கு நல்ல காலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் மாஸ் நடிகர்கள் படங்கள் குறிப்பாக ரஜினியின் ‘வேட்டையன்’, கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ விஜய்யின் ’கோட்’ அஜித்தின் ’விடாமுயற்சி’ சூர்யாவின் ‘கதங்குவா’, மற்றும் தனுஷின் ‘ராயன்’ உள்ளிட்ட  திரைப்படங்கள் வெளியாவதால் இந்த படங்கள் அனைத்தும் வெற்றி படங்களாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement