• Jan 18 2025

ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு விஜய் சேதுபதி பக்காமாசு! இன்னைக்கு இல்ல நாளைக்கு! BIGG BOSS 8 PROMO

subiththira / 3 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியின் பிரபல ஷோக்களில் ஒன்று பிக் பாஸ். இதற்க்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். தற்போது 7 சீசன்களை கடந்து வந்த பிக் பாஸ் தற்போது சீசன் 8ல் காலடிவைத்துள்ளது. இந்தவருடம் பிக் பாஸ் எதிர்பார்த்த அனைவருக்காகவும் நிறைய சூப்பரான அப்டேட்கள் வந்த வண்ணம் உள்ளன.


கமலஹாசன் தொகுத்து வழங்கிய இந்த பிக் பாஸ் சோவை இந்த முறை நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவுள்ளார். இந்நிலையில் பிக் பாஸ் போட்டியாளர்களும் உறுதிபடுத்தபட்டிருந்தனர். அதில்  ரவீந்தர் ,ஸ்டாலின் சோயா ,சுனிதா , தீபக் ,அர்னவ் ,அஞ்சிதா ,பாரதி கண்ணம்மா அருண் ,நடிகர் ரஞ்சித் ,மாநாடு மயிலாட கோகுல்நாத் ,பால் டப்பா ,விஜி.விஷால் ,சந்தோஷ் பிரதாப் ,ஜாக்லின் ,தர்ஷ குப்தா என 18 நபர்கள் பங்குபற்றுகின்றனர். 


நாளை பிரமாண்டமாக நடைபெறவுள்ள பிக் பாஸ் சீசன் 8க்கான ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் விஜய் சேதுபதி மீசை இல்லாமல் வெள்ளை கோட் டிரஸ் போட்டு மாஸாக பிக் பாஸ் வீட்டுக்குள் என்றி ஆகிறார். புது வீடு ரெடி, புது போட்டியாளர்களும் ரெடி, புது தொகுப்பாளர் நானும் ரெடி. வீடு ரொம்ப அழகா இருக்கு இப்ப காட்டமாட்டோம் நாளைக்கு என்று கூறுவதோடு ப்ரோமோ முடிவடைகிறது. 




Advertisement

Advertisement