• May 18 2024

உங்களை நம்பின என்னை ஏமாத்திட்டீங்களே-தந்தையின் கள்ளத்தனத்தை அறிந்த ப்ரீத்தி- பரபரப்பான பொன்னி சீரியல் ப்ரோமோ

stella / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சீரியல் தான் பொன்னி. இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் காணப்படுகின்றது.  இந்த சீரியலில் தற்பொழுது ஷக்தி ப்ரீத்தியைக் காதலித்து வந்தார்.இருப்பினும் ஷக்தியை ப்ரீத்தி திருமணம் செய்ய மறுத்ததால் பொன்னி மாமாவின் பேச்சைக் கேட்டு ஷக்தியைத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

ஆனால் ஷக்தி பொன்னி மீது கடும் கோபத்தில் இருக்கின்றார்.இருந்தாலும் ஷக்தியின் அப்பா பொன்னியையும் ஷக்தியையும் எப்படியாவது சேர்த்து வைக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருக்கின்றார்.


இப்படியான நிலையில் தற்பொழுது ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் ப்ரீத்தியின் வீட்டில் அம்மா பூஜை செய்து கொண்டிருக்கும் போது சாமிப் போட்டோ கீழே விழுந்த உடைகின்றது. அந்த நேரம் வீட்டுக்கு ரைடு வருகிறாங்க என்று ப்ரீத்தியின் அப்பாவுக்கு தெரிய வர அவர் போதைப் பொருளை என்ன செய்வது என்று யோசிக்கின்றார்.

பின்னர் அதனை குப்பபை வண்டியில் ஏற்றி விடலாம் என்று கொண்டு செல்லும் போது அது கீழே விழுந்து விடுகின்றது. இதனைப் பார்த்த ப்ரீத்தி தன்னுடைய அப்பாவைத் திட்டுகின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது.


Advertisement

Advertisement