யோகி பாபு தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார். தனது தனித்துவமான நடிப்பு மற்றும் நகைச்சுவை டைமிங்கின் மூலம் ரசிகர்களின் மனதில் தனி இடத்தைப் பிடித்துள்ளார். பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள அவர், தற்போது தமிழ் திரைப்பட உலகில் மிகவும் பிஸியாக இருக்கும் நடிகர்களில் ஒருவராகவும் திகழ்கிறார்.

ஆனால் இன்று இந்த அளவுக்கு வெற்றி பெற்றிருக்கும் யோகி பாபுவின் வாழ்க்கை ஆரம்பத்தில் மிகவும் எளிதானதாக இருக்கவில்லை. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது தனது வாழ்க்கையின் ஆரம்பகால நினைவுகளை அவர் பகிர்ந்து கொண்டுள்ளார். குறிப்பாக தனது சிறுவயதில் இருந்த கனவுகள் மற்றும் அதற்காக செய்த முயற்சிகள் குறித்து அவர் மனம் திறந்து பேசியுள்ளார்.
அந்த நிகழ்ச்சியில் பேசுகையில், யோகி பாபு தனது குடும்ப பின்னணி குறித்து சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்தார். “என்னோட அப்பா மிலிட்டரியில் இருந்ததால் ரொம்ப ஸ்கிரிக்ட். அவர் சொன்ன ஆர்மி கதைகளைக் கேட்டு எனக்கும் அதில் சேர ஆசை வந்தது. அதற்காக பெங்களூரு MEG ஹார்டனில் சுமார் 8 மாதங்கள் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டேன். ஏதாவது ஒரு வழியில் வாய்ப்புக் கிடைத்துவிடாதா என ஏங்கினேன். ஆனால், முயற்சி கை கொடுக்கவில்லை.” என்று நினைவுகூர்ந்தார்.
இன்று அவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து நடித்து வருகிறார். பல திரைப்படங்களில் முக்கியமான நகைச்சுவை கதாபாத்திரங்களை ஏற்று ரசிகர்களை சிரிக்க வைக்கிறார். அதே நேரத்தில் சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.
யோகி பாபுவின் வாழ்க்கை பயணம் பலருக்கும் ஒரு ஊக்கமாக பார்க்கப்படுகிறது. ஒரு கனவு நிறைவேறவில்லை என்றாலும் வாழ்க்கை அங்கேயே முடிந்து விடாது என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டாக அவர் திகழ்கிறார்.
Listen News!