பிரபல எழுத்தாளர் சாரு நிவேதிதா இளையராஜா பற்றி மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார். நேற்று முன் தினம் இளையராஜா லண்டனில் சிம்பெனி அரங்கேற்றத்தினை நிகழ்த்தி நாடு திரும்பியுள்ளார். இவருக்கு ரசிகர்கள் சினிமா பிரபலங்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது பிரபல எழுத்தாளர் சாரு நிவேதிதா சினிமா குறித்தும் இளையராஜா குறித்தும் முரணாக கூறியுள்ளார். அவரது பதிவில் "ஒரு தேசத்தின் கலாச்சாரத்தையே சீரழித்த சினிமாவில், பத்தாயிரம் பாடல்களுக்கு மேல் இசையமைத்திருக்கிறேன். இதை இந்த உலகத்தில் வேறு யாரும் செய்ததில்லை. இப்போது எங்களை ஆண்ட வெள்ளைக்காரனின் சபையில் போய் ஸிம்ஃபனி அமைக்கிறேன் என்று ஒருவர் சொன்னால், "இந்தப் பிரபஞ்சத்தில் ஜீவிக்க எல்லோருக்கும் உரிமை இருக்கிறது” என்று மட்டுமே சொல்ல முடியும். வேறு என்ன செய்ய? " என எழுதியுள்ளார்.
மேலும் இது தற்போது இளையராஜாவை நோக்கி அவர் கூறிய இந்த கருத்துகள் இன்னும் பல விவாதங்களை தூண்டும் வகையில் அமைந்துள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Listen News!