• Mar 15 2026

அட்லீ படத்தில் இருந்து விலகிய சன் பிக்சர்ஸ்...! காரணம் என்ன..?

Mathumitha / 1 year ago

Advertisement

Listen News!

ராஜாராணி ,தெறி ,பிகில் போன்ற பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் அட்லீ சமீபத்தில் தெறி பட ரீமேக் படமான "ஜவான்" படத்தினை ஹிந்தியில் தயாரித்திருந்தார். படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாமல் தோல்வியை பெற்றது. இதனால் இவருக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.


இந்த நிலையில் இவர் அடுத்து சண் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதியை வைத்து படம் இயக்கவுள்ளதாக உறுதியான தகவல்கள் பல வெளியாகியிருந்தன இந்த நிலையில் தற்போது இவருக்கு தயாரிப்பு நிறுவனம் ஒதுக்கிய தொகை 50 கோடி ஆனால் இவர் தனது சம்பளத்தினை 100 கோடியாக கேட்டமையினால் இவர்கள் தயாரிப்பில் இருந்து வெளியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


மேலும் அட்லீ அடுத்து புஷ்பா பட நாயகன் அல்லு அர்ஜுன் உடன் கூட்டணி வைக்கவுள்ளார். இப் படத்தினை தில்ராஜு தயாரிக்கவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. மற்றும் இப் படத்தின் அறிவிப்பு ஏப்ரல் 8 ஆம் திகதி அல்லு அர்ஜுனின் பிறந்தநாள் அன்று வெளியாகும் என குறிப்பிடப்படுள்ளது.

Advertisement

Advertisement