• May 06 2026

தாய் கிழவி' படத்தில் விஜய் சேதுபதியை கலாய்த்த காட்சி நீக்கமா.? டெலிட்டேட் சீன் இதோ

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா சரத்குமார்  முக்கிய வேடத்தில் நடித்து வெளியான திரைப்படம் தான் தாய் கிழவி.. இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தனது தயாரிப்பு நிறுவனமான எஸ்.கே. தயாரிப்பு நிறுவனம் மூலம் வெளியிட்டுள்ளார்.

இந்தப் படத்தில் ராதிகாவின் தோற்றம் மற்றும் மேக்கப் ரசிகர்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றது. குறிப்பாக கமல் ஹசன் கூட ராதிகாவின் மேக்கப்பை பாராட்டியதாக கூறப்படுகிறது.  

சமூகத்திற்கு தேவையான நல்ல கருத்துகளை இந்த படம் எடுத்துரைப்பதால், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. விரைவில் படம் 100 கோடி வசூலை எட்டும் எனவும் கூறப்படுகிறது.


இந்நிலையில், தாய் கிழவி படத்தில் இருந்து நீக்கப்பட்ட ஒரு காட்சி தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த காட்சியில் சிங்கம் புலி மருத்துவமனை முன்பு அழுது கொண்டிருக்கும் போது, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமலை மாற்றி விஜய் சேதுபதி வந்தது குறித்து அவர் பேசும் வசனம் இடம்பெற்றுள்ளது.

இந்த காட்சி விஜய் சேதுபதியை கலாய்ப்பது போல் இருப்பதாக கூறப்படுவதால் படத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இதை பார்த்த ரசிகர்கள் “இந்த காட்சியை ஏன் நீக்கினீர்கள்?” என்று சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Advertisement

Advertisement