• Sep 21 2024

சந்திரமுகி 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் வடிவேலு செய்த விசயம்- ராதிகா ஷேர் செய்த வீடியோ!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

கடந்த 2005ல் வெளியாகி பிளாக் பாஸ்டர் வெற்றி பெற்ற திரைப்படம் தான் சந்திரமுகி.இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா, ஜோதிகா, வடிவேலு, பிரபு உள்ளிட்ட பிரபலங்கள் பலர் நடித்திருந்தனர். இப்படத்தை பி.வாசு இயக்கியிருந்தார்.

மனநல பிறழ்வால் பாதிக்கப்பட்ட தன்னுடைய நண்பனின் மனைவியை அதிலிருந்து மிகவும் புத்திசாலித்தனமாக அவர் காப்பாற்றுவதாக கதைக்களம் காணப்பட்டது. இந்தப் படம் வெளியாகி 18 ஆண்டுகளை கடந்த நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.

லைக்கா தயாரிக்கவுள்ள இப்படத்தில் ரஜினிக்கு பதில் லாரன்ஸ் இணைந்துள்ளார். அவருக்கு த்ரிஷா அல்லது லஷ்மி மேனன் ஜோடியாக நடிக்கவுள்ளார்.

மேலும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு நடிகர் லாரன்ஸ் தனது குருவான நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.

இப்படத்தின் படப்பிடிப்பு மைசூரில் நடைபெற்று வருகிறது. மேலும் இதில் ராதிகா சரத்குமாரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து நடிகை ராதிகா ஒரு வீடியோவை ஷேர் செய்துள்ளார்.

படப்பிடிப்பின் கேப்பில் ராதிகா, லாரன்ஸ் மற்றும் வடிவேலு ஆகியோர் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது சுறா படத்தில் இடம்பெற்ற கச்சேரி சீனை நினைவுப்படுத்தி அதனை ரீகிரியேட் செய்துள்ளார் நடிகர் வடிவேலு. அவர் செய்ததை சிரித்தப்படியே வீடியோ எடுத்துள்ள ராதிகா அதனை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

வடிவேலு திரைப்படங்களில் தனது எக்ஸ்ட்ராடினரி இருப்பு மூலம் நம்மில் பலரை மகிழ்வித்துள்ளார். அத்தோடு அவர் பிரபலமான காட்சியை மீண்டும் ரீகிரியேட் செய்துள்ளார், எந்த பிரபலமான திரைப்படக் காட்சி இது? என்றும் கேட்டுள்ளார் ராதிகா. மேலும் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், அன்றும் இன்றும் என்றும் ஒரே நகைச்சுவை நாயகன் அண்ணன் வடிவேலு மட்டுமே என புகழ்ந்து வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement