தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக திகழ்ந்த ஸ்ரீ "கனா காணும் காலங்கள்" என்ற தொடரின் மூலம் அறிமுகமாகி தொடர்ந்தும் பல படங்களில் நடித்திருந்தார். தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியதுடன் முன்னணி நடிகராகவும் காணப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து சின்னத்திரை மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமும் மக்களின் மனங்களைக் கவர்ந்தார். வழக்கமான ஸ்மார்ட் லுக்கில் திகழ்ந்த நடிகர் ஸ்ரீ, சமீபத்தில் வெளியிட்டுள்ள புதிய வீடியோ மூலம் ரசிகர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளார்.
அந்த வீடியோவில், அவர் தலையில் கலர் பூசிக் கொண்டு, மிகவும் மோசமான தோற்றத்துடன் காணப்பட்டார். வழக்கமாக திரையுலகில் அழகாக காணப்பட்ட நடிகர் ஸ்ரீ இந்த வீடியோவில் முற்றிலும் வித்தியாசமாக இருப்பதுடன் ரசிகர்களை சோகத்திலும் ஆழ்த்தியுள்ளார்.
இது அவருடைய ஆரோக்கியத்தைப் பற்றி பல சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது. "திடீரென இப்படி மெலிந்து விட்டார் என்றால் உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கலாம்" என்று பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர். வீடியோ வெளியாகியவுடன், சமூக ஊடகங்களில் பல்வேறு விதமான கருத்துகள் பரவ ஆரம்பித்தன. அத்துடன் சிலர் இவர் நீண்ட நாட்கள் தனிமையில் இருந்ததால் அவருக்கு சற்று மனநிலை பாதிக்கப்பட்டிருக்குமோ என்றும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
Listen News!