தமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான திரைப்படங்களை வழங்கி வரும் நடிகர் சசிகுமார் சமீபத்தில் வெளியான " டூரிஸ்ட் பேமிலி " திரைப்படத்தின் மூலம் உலகளவில் ரூ.91 கோடி வரை வசூலித்து ப்ளாக் பஸ்டர் வெற்றியை பதிவு செய்துள்ளார். இந்த வெற்றியை தொடர்ந்து அவர் நடித்துள்ள Freedom திரைப்படம் இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் உருவாகி விமர்சன ரீதியாகவும் பாராட்டுகளை பெற்றுள்ளது.
இந்நிலையில் Freedom படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துக்கொண்ட சசிகுமார் ஒரு சம்பவத்தை பகிர்ந்தார். டூரிஸ்ட் பேமிலி வெற்றி விழாவில், “சம்பளத்தை உயர்த்த மாட்டேன்” என கூறியதையடுத்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பும் அதே நேரத்தில் கலாய்ப்புகளும் வந்ததாக அவர் கூறினார்.“நீ என்ன பெரிய காந்தியா?”,“நீ என்ன தியாகியா?”, “பாட்டுக்கு சொன்னதா, இல்ல நினைச்சுட்டு சொன்னதா?”, “நீ எதுக்குங்க சம்பளத்தை விட்டு கொடுக்குற?” என பல்வேறு கேள்விகள் என்னிடம் வந்தது. என அவர் சிரித்தபடியே பகிர்ந்தார்.
இது தொடர்பாக சசிகுமார் மேலும் கூறியதாவது “நான் ஒரு கலைஞன். எனக்கு வசூல் முக்கியமில்லை. நல்ல படங்கள் தான் முக்கியம். ஒரு படம் ஹிட்டா இருந்தா அது முழு குழுவின் வெற்றி. அதை பணமாக மட்டும் பார்க்க முடியாது” என உணர்வுடன் தெரிவித்தார்.
Listen News!