• Sep 20 2024

தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படவுள்ள அஸ்வினின் என்ன சொல்லப்போகிறாய் திரைப்படம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய்டிவியில் ஒளிபரப்பாகிய குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபல்யமானவர் தான் அஸ்வின். இவர் இதற்கு முதல் பல ஆல்பம் பாடல்களிலும் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்திருக்கின்றார்.

இருப்பினும் குக்வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் தான் தனக்கென ஏராளமான ரசிகர் பட்டாளத்தை சேர்த்துக் கொண்டார். இவரது நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் என்ன சொல்ல போகிறாய். ரசிகர்கள் எதிர்பார்த்த அளவு இப்படம் வெற்றி பெறவில்லை.

மேலும் இப்படத்தின் ஆடியோ விழா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையில் நடந்தது. அதில் கலந்துகொண்டு பேசிய அஸ்வின் தன்னை சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு நினைத்துக்கொண்டு ஓவராக புகழ்ந்து பேசிக் கொண்டார்.

அதில் நான் இந்த படத்துக்கு முன்னர் 40 கதைகள் கேட்டேன். எல்லா கதைகளிலும் தூங்கிவிட்டேன். இந்த கதை கேட்கும் போது தூங்கவில்லை. அதனால் இதில் நடிக்க ஒத்துக்கொண்டேன் எனப் பேசியிருந்தார். அவரின் இந்த பேச்சு அவரிடம் கதை சொன்ன உதவி இயக்குநர்களை அவமதிக்கும் விதமாக உள்ளதாக சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

அத்தோடு முதல் படம் ரிலீஸ் ஆகும் முன்பே இவ்வளவு திமிரா என்று நெட்டிசன்கள் கலாய்த்தனர். இப்படி ஒரு நெகட்டிவ் பப்ளிசிட்டியோடு ஜனவரி 13 ஆம் தேதி வெளியான என்ன சொல்ல போகிறாய் திரைப்படம் திரையரங்குகளில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கவில்லை.

அதையடுத்து ஏப்ரல் 15 ஆம் தேதி ஜி 5 ஓடிடி தளத்தில் வெளியானது. இந்நிலையில் ஓடிடியில் வெளியாகி ஒரு மாதம் கழித்து வரும் மே 15 ஆம் தேதி ஷு தமிழ் தொலைக்காட்சியில் மாலை 3.30 மணிக்கு பிரீமியர் ஆக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement