• Apr 30 2024

வாரிசு' வெளியீட்டுக்கு நடக்கும் ஏற்பாடுகள்-இது வெறும் ஆரம்பம் தான் கண்ணா.. வெளியான மாஸ் வீடியோ!

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் வாரிசு.இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியாகியிருந்தது.இப்படமான தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கியுள்ளதோடு கதாநாயகியாக ராஷ்மிகத மந்தனா நடித்து வருகின்றார்.

வாரிசு வெளியாகும் அன்றே துணிவு திரைப்படமும் வெளியாவதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புக் காணப்படுகின்றது.சமீபத்தில் வாரிசு படத்திற்கு 35 சதவீத திரையரங்குகள் மட்டுமே தமிழகத்தில் ஒதுக்கப்படும் என தயாரிப்பாளர் கே ராஜன் சர்ச்சைக்கு வித்திடும் வகையில் பேசி உள்ள நிலையில், தற்போது வரை வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்களுக்கு எவ்வளவு திரையரங்குகள் ஒதுக்கப்பட உள்ளன என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.


 அதே நேரம் துணிவு படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து படக்குழு பரபரப்பாக போஸ்ட் புரோடக்ஷன் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது.ஆனால் வாரிசு படத்தில் இன்னும் சில காட்சிகள் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த வாரம்... சென்னை செம்மரம் பாக்கம் அருகே உள்ள தனியார் ஸ்டுடியோவில் விலங்குகள் நலத்துறையின் உரிய அனுமதி இன்றி 5 யானைகளை வைத்து, படப்பிடிப்பு நடத்தியதற்காக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது மட்டும் இன்றி, 7 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என கூறியுள்ளது.

வாரிசு படத்திற்கு பிரச்சனைகள் ஒருபக்கம் இருந்தாலும், படத்தின் ரிலீசுக்கான பணியில் முழு வீச்சில் இறங்கியுள்ளது, வாரிசு படத்தின் தமிழக விநியோகஸ்தர் உரிமையை கைப்பற்றியுள்ள 7 ஸ்கிரீன் நிறுவனம். மிக பிரமாண்ட போஸ்டர் ஒன்றை, அச்சிட்டு... பேனர் வைக்கும் வரை தத்துரூபமாக வீடியோ வெளியிட்டுள்ளது. இதில் இது வெறும் ஆரம்பம் தான் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களியிலே ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருவதையும் காணலாம்.




Advertisement

Advertisement

Advertisement