• Apr 20 2024

இவ்வளவு துப்பி அசிங்கப்படுத்துவ என்று எனக்கு தெரியாது-மைனா நந்தினியை அவமானப்படுத்திய தனலக்ஷ்மி

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நடைபெற்று வரும் டாஸ்க்கில் போட்டியாளர்கள் ஏலியன்களாகவும், ஆதிவாசியாகவும் இரு அணிகளாக பிரிந்து விளையாடி வருகின்றனர். இதில் ஏலியன் அணியினர் வீட்டின் உள்ளேயும், ஆதிவாசி அணியினர் கார்டன் ஏரியாவிலும் இருக்க வேண்டும். 

ஏலியன் அணியினர் ஆதிவாசி அணியினரிடம் இருந்து கல்லையும், ஆதிவாசி அணியினர் ஏலியன் அணியில் இருந்து பூவையும் கைப்பற்றுவதே டாஸ்க் ஆகும்.ஏலியன் அணியினர் கொடுக்கும் டார்ச்சர்களை பொறுத்துக்கொண்டு ஆதிவாசி அணியினர் கோபப்படாமல் இருந்தால் அவர்கள் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு அவர்களுக்கு பூ கொடுக்கப்படும், 


அதேபோல் ஆதிவாசி அணியினர் செய்யும் டார்ச்சர்களை பொறுத்துக்கொண்டு ஏலியன் அணியினர் வெற்றிபெற்றால் அவர்களுக்கு கல் கொடுக்கப்படும். இதனால் ஹவுஸ்மேட்ஸ் கவனமாக டாஸ்க்கிளை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஆதிவாசிகளிடம் வந்திருக்கும் தனலக்ஸ்மிக்கு மைனா நந்தினி தண்ணீர் கொடுக்கின்றார். அதனை குடித்துப் பார்த்த தனலக்ஷ்மி துப்பி விட கடுப்பான மைனா நான் உனக்கு பாசமாகத் தந்தேன். ஆனால் நீ இப்படி பண்ணுவ என்று எதிர்பார்க்கல என்று கூறியுள்ளார் இது குறித்த வீடியோ வைரலாகி வருவதையும் காணலாம்.


Advertisement

Advertisement

Advertisement