• Jan 18 2025

எங்களுக்கு குழந்தையே பிறக்காதுனு சொன்னாங்க சுந்தர்சி உருக்கம்! ஆனா எப்பிடி ரெண்டு பொண்ணு வந்துச்சு

Nithushan / 8 months ago

Advertisement

Listen News!

ஒரு சில சினிமா பிரபலங்கள் மாத்திரமே இயக்குநர் நடிகர் என இரு பரிமாணத்தில் சிறந்து விளங்கக்கூடியவர்கள். அவ்வாறு இருக்கும் கலைஞரான சுந்தர்சி தனது திருமண வாழக்கை பற்றி அதிர்ச்சி தகவல் ஒன்றை கூறியுள்ளார். 


அன்பே சிவம் , கலகலப்பு , அரண்மனை போன்ற ஹிட் படங்களை கொடுத்தவர் சுந்தர்சி ஆவார். இவர் சமீபத்தில் அரண்மனை பாகம் நான்கையும் இயக்கி அதன் ப்ரோமோஷனுக்காக பல இடங்களில் இன்டெர்வியு கொடுத்து வருகின்றார்.


அவ்வாறே ஒரு இன்டெர்வியுவில் அவர் கூறுகையில் " நான் குஸ்புவை திருமணம் செய்த பின்னர் அவருக்கு உடல் நிலை குறைவாக உள்ளதென்று வைத்தியசாலை சென்றோம் அப்போது வைத்தியர்கள் உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை குழந்தையே பிறக்காது என கூறியிருந்தார்கள். அப்போது இருவரும் மனமுடைந்து இருந்தோம் குஸ்பு கூட என்னிடம் நீங்கள் வேறு திருமணம் செய்துகொள்ளுங்கள் என்று கூறினார். ஆனால் இப்போது எங்களுக்கு இரண்டு பெண்குழந்தைகளை கடவுள் கொடுத்துள்ளார்" என மிகவும் உருக்கமாக பேசியுள்ளார் சுந்தர்சி 

Advertisement

Advertisement