சமூகவலைத்தளங்கள் இன்று ஒரு சக்தி வாய்ந்த ஊடகமாக மாறியுள்ளன. அதனை அடிப்படையாக கொண்டே பலர் சமூக சேவை என்ற பெயரில் செய்திகளை மக்களிடம் கொண்டு செல்ல முயல்கின்றனர். அந்த வகையில், பிரபல யூடியூபர் இப்ரான் மற்றும் அவரது மனைவி, மக்களுக்கு உணவளித்த ஒரு செயல் தற்பொழுது பல எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்திற்கு பின்னணியில் ஒரு நல்ல நோக்கம் இருந்தாலும், அதை செயல்படுத்திய விதம் சிலரிடம் விமர்சனத்தை உருவாக்கியுள்ளது. குறிப்பாக VJ பார்வதி இந்த செயலைக் கடுமையாக விமர்சித்ததுடன் இப்ரானை நேரடியாக தாக்கியும் உள்ளார்.
பிரபல யூடியூப் சேனலை நடத்தி வரும் இப்ரான், சமீபத்தில் தனது மனைவியுடன் சேர்ந்து மக்களுக்கு உணவு வழங்கும் ஒரு செயலை தனது vlog ல் பதிவு செய்தார். இதில் முக்கியமான விடயம் என்னவென்றால், அவர்கள் உணவுகளை வழங்கும் போது காருக்குள் அமர்ந்த படியே உணவுகளைக் கொடுத்துள்ளனர். இதனை அவர் தனது "சமூக சேவை செய்யும் பசுமை முயற்சி" என விளக்கியிருந்தாலும், சமூக வலைத்தளங்களில் இது பற்றிய கருத்துக்களை சிலர் விமர்சித்து வருகின்றனர்.
இந்தச் செயலை முற்றிலும் தாக்கி, மிகுந்த விமர்சனத்தோடு VJ பார்வதி எதிர்த்துள்ளார். பார்வதி அதில் "சமூக சேவை செய்யுறம் என்று இந்த புதுப் பணக்காரங்க செய்யுற வேலை இருக்கே தாங்க முடியல என்றார். மேலும் சமூக சேவை செய்ய வெளிக்கிட்டாப் பிறகு பாதுகாப்பு எல்லாம் பார்க்கக் கூடாது" எனவும் கூறியுள்ளார். இந்தக் கருத்துக்களுக்கு இன்னும் இப்ரான் எவ்விதமான விளக்கமும் அளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!