தமிழ் சினிமாவில் சமீபகாலமாக முக்கியமான விவாதமாக பேசப்பட்டு வருவது ஹேமா கமிஷன் அறிக்கையில் இடம்பெற்ற புகார்கள் மற்றும் பெண்கள் எதிர்கொள்ளும் தொந்தரவுச் சம்பவங்கள். இவ்விவகாரத்தில் திரைத்துறையின் பல பிரபலங்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்ற நிலையில், தற்பொழுது நடிகை மிருணாளினி தனது தனிப்பட்ட அணுகுமுறையுடன் கூடிய விளக்கத்தை அளித்துள்ளார்.
செய்தியாளர்கள் முன்னிலையில் மிருணாளினி மிகவும் நிதானமாகவும், தெளிவாகவும் தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார். அவர் அதில் கூறியதாவது, “ அனைவரும் படிச்சிட்டு அமைதியா இருந்தா பாதுகாப்பு தானாகவே வந்துடும் " என்று கூறிய கருத்து அனைத்துப் பெண்களுக்கும் வாழ்க்கைப் பாடமாக அமைந்துள்ளது.
மேலும் அவர், “நாங்க தொந்தரவு இல்லாம இருந்தா எங்களுக்கு தொந்தரவு வராது" என்று கூறியது அந்த இடத்தில் இருந்த அனைவரையும் சற்று அமைதியாக்கி விட்டது. மிருணாளினியின் இந்தப் பதிலை வைத்து சமூக வலைத்தளங்களில் பல விதமான கருத்துக்கள் எழுந்துள்ளன. சிலர் அவரது தன்னம்பிக்கையையும், நேர்மையையும் பாராட்டுகின்றார்கள்.
மிருணாளினியின் வார்த்தைகள், அவரது தனிப்பட்ட அனுபவத்தின் வெளிப்பாடாக இருந்தாலும் அது ஒரு பிரபல நடிகையின் வலிமையான குரல் என்பதால், இது பற்றிய விவாதம் பரபரப்பாக மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது.
Listen News!