தளபதி விஜய் நடித்த ’கோட்’ திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படம் சோலோவாக வெளியாகும் என்றும் ’கோட்’ படத்திற்கு எந்த படமும் போட்டியாக இருக்காது என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென விஷால் நடித்த படம் அதே தேதியில் வெளியாக இருப்பதாக கூறப்படுவது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
விஜய் நடித்த ’கோட்’ திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் அடுத்த மாதம் முதல் இந்த படத்தின் விளம்பர பணிகளும் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக டீசர், ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா ஆகியவை அடுத்த மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ’கோட்’ திரைப்படம் வெளியாகும் அதே செப்டம்பர் 5ஆம் தேதி விஷால் நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ரிலீசாகாமல் இருந்த ’மதகஜ ராஜா’ என்ற திரைப்படம் ரிலீஸ் ஆக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு ஏற்பட்ட பல்வேறு பிரச்சனை காரணமாக ரிலீஸ் செய்ய முடியாமல் இருந்த நிலையில் தற்போது அனைத்து பிரச்சனைகளும் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதாகவும் இதனை அடுத்து இந்த படத்தை செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் செய்ய விஷால் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே 2026 ஆம் ஆண்டு விஜய்க்கு எதிராக விஷால் தனிக்கட்சி ஆரம்பித்ததோ அல்லது வேறு ஏதேனும் அரசியல் கட்சியில் இணைந்தோ அரசியல் செய்ய இருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது அவருடைய ’கோட்’ படத்துடன் தன்னுடைய ’மதகஜராஜா’ படத்தையும் மோத வைத்திருப்பது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் ‘டீன்ஸ்’ என்ற சின்ன பட்ஜெட் படத்துடன் மோதி ‘இந்தியன் 2’ மண்ணை கவ்விய நிலையில் ‘மதகஜ ராஜா’ படத்தால் ‘கோட்’ படத்திற்கு பாதிப்பு ஏற்படுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Listen News!