• Jan 18 2025

இந்த தப்பையெல்லாம் நாம் செஞ்சிடக்கூடாது.. எச் வினோத் உடன் ‘இந்தியன் 2’ படம் பார்த்த விஜய்..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

சமீபத்தில் வெளியான கமல்ஹாசனின் ’இந்தியன் 2’ திரைப்படத்தை தளபதி விஜய் பார்த்ததாகவும் அப்போது உடன் எச் வினோத் இருந்ததாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவான ’இந்தியன் 2’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான நிலையில் முதல் நாள் முதல் காட்சி முடிந்த உடனே இந்த படத்திற்கு ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்தன,

குறிப்பாக அரசியல் காட்சிகள் ஒருதலைபட்சமாக இருப்பதாகவும் தமிழ்நாட்டில் ஏகப்பட்ட லஞ்ச ஊழல் பிரச்சனை இருக்கும் நிலையில் அது பற்றி இந்த படம் பேசாமல் மற்ற மாநிலத்தில் உள்ள லஞ்சம் ஊழலை மட்டுமே பேசுகிறது என்றும் இதற்கு  ஆளுங்கட்சியை எதிர்க்க வேண்டாம் என்ற காரணங்கள் இருக்கலாம் என்றும் விமர்சனம் செய்யப்பட்டது.

ஒரு அரசியல் படம் என்பது மக்கள் முழுமையாக நம்பும் அளவுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்றும் விமர்சனங்கள் எழுந்த நிலையில் இந்த படத்தை தளபதி விஜய் நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரிவியூ திரையரங்கில் பார்த்ததாகவும் அவருடன் எச் வினோத்தும் இந்த படத்தை பார்த்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தை பார்த்து முடித்ததும் எச் வினோத் மற்றும் விஜய் ஆகிய இருவரும் சில நிமிடங்கள் ஆலோசனை செய்ததாகவும் ’தளபதி 69’ படமும் அரசியல் படம் என்பதால் ’இந்தியன் 2’ படத்தில் செய்த எந்த தப்பையும் அந்த படத்தில் செய்து விடக்கூடாது என்றும் தமிழக அரசியலில் புகுந்து விளையாட வேண்டும் என்று முடிவெடுத்ததாகவும் கூறப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பது படம் வெளி வந்தால் தான் தெரியும்.

Advertisement

Advertisement