• May 08 2024

நடிகர் சூரியை வாழ்த்திய வீரேந்திர சேவாக்- வைரலாகும் வீடியோ- என்ன சொன்னாங்க தெரியுமா?-

stella / 1 year ago

Advertisement

Listen News!


நடிகர் சூரி இதுவரை காமெடியனாக மட்டுமே தமிழ் சினிமாவில் இருந்து வந்த நிலையில் விடுதலை படத்தின் ரிலீசுக்கு பிறகு ஒரு நடிகராக அவரது இமேஜ் மாறி இருக்கிறது. வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் கதாநாயகனாக தனது நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அத்தோடு இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்றது.

மேலும் இப்படத்தில் அவரது நடிப்புக்கு அதிகம் பாராட்டுகள் குவிந்து வருகிறது.இந்நிலையில் விடுதலை பட ப்ரோமோஷனுக்காக கிரிக்கெட் வீரர் சேவாக்கை சூரி சந்தித்து இருக்கிறார். 'உங்க படங்கள் நிறைய பார்த்திருக்கிறேன்' என சூரியை பார்த்து சேவாக் கூறி இருக்கிறார்.


அந்த வீடியோவை தற்போது சூரியே வெளியிட்டு இருக்கிறார். இந்த சந்திப்பாது சூரி இன்றைய தினம் ரி 20 கிரிக்கெட் விளையாட்டைப் பார்க்கப் போகும் போதே நிகழ்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement