• Jul 27 2024

இதைவிட வேற என்ன ஸ்டைல் வேணும்.. மனைவி கொடுத்த பைக்கில் ஸ்டைலாக அஜித்..!

Sivalingam / 2 months ago

Advertisement

Listen News!

தல அஜித் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். 

அதுமட்டுமின்றி தனது கணவருக்கு பிறந்தநாள் பரிசாக ஷாலினி அஜித், டுகாட்டி பைக் ஒன்றை பரிசாக அளித்தார் என்றும் இந்த பைக்கின் விலை 25 லட்சத்திற்கும் மேல் என்றும் கூறப்பட்டது. 

இந்த நிலையில் மனைவி கொடுத்த பைக்கில் ஸ்டைலாக அஜித் உட்காந்திருக்கும் புகைப்படத்தை ஷாலினி , தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இதை விட வேற என்ன வேண்டும் ஒரு பெண்ணுக்கு? ஒரு பெண்ணுக்கு இதைவிட ஸ்டைலான கணவர் எப்படி கிடைப்பார்? என்று கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது. 

அஜித்துக்கு மிகவும் பிடித்தமான பைக்கை அவரது மனைவி பரிசாக வழங்கி உள்ளார் என்பது அதுவும் அவருக்கு மிகவும் பிடித்த டுகாட்டி பைக்கை வழங்கி உள்ள நிலையில் அந்த பைக்கில் அவர் அட்டகாசமாக உட்கார்ந்து இருக்கும் காட்சியை பார்த்து ரசிகர்கள் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகிறார்கள். லைக்ஸ்களும் குவிந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் அஜித் தற்போது ’விடாமுயற்சி’ என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அடுத்ததாக அவர் ’குட் பேட் அக்லி’ என்ற படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement