பிக்பாஸ் என்றாலே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு, பரபரப்பு, மற்றும் கலகலப்பு என அனைத்தும் ஒரே அடுக்காக ஏற்படும். ஒவ்வொரு நாளும் வெளிவரும் நிகழ்ச்சிகள், அதில் போட்டியாளர்கள் இடையே நடந்த உரையாடல்கள், உணர்ச்சிபூர்வ தருணங்கள் மற்றும் நகைச்சுவை அம்சங்கள் ரசிகர்களை மகிழ்விக்க வைத்திருக்கின்றன.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் நடந்த ஒரு சிறிய உரையாடல், தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் வைரலாக மாறியுள்ளது. இந்த உரையாடலில் போட்டியாளர்கள் கம்ருதீன் மற்றும் வினோத் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் இடையே ஒரு ஓய்வு தருணத்தில், கம்ருதீன் திடீரென தத்துவமாக கதைத்தார். அதன்போது கம்ருதீன், யாரையும் நம்பாதே.!" நீ வந்ததை மட்டும் நம்பு. " என தத்துவமாக பேசினார்.

இதைக் கேட்ட மற்றொரு போட்டியாளரான வினோத் "நான் உன்னையே நம்பலாமா? வேண்டாம்னு யோசிக்கிறேன்.நீ பயங்கரமான ஆளா இருக்கியே.. " என்று கலாய்த்துள்ளார். இவ்வாறாக பிக்பாஸ் வீட்டுக்குள் கம்ருதீன் பேசிய தத்துவமும், அதற்கு வினோத் கொடுத்த கவுண்டரும் வைரலாகியுள்ளது.
அவரது இந்த பேச்சு, அந்த தருணத்தில் இருந்த மற்றவர்களுக்கு சிரிப்பை தூண்டும் வகையில் அமைந்திருந்தது. இவ்வாறாக பிக்பாஸ் நிகழ்ச்சி கலகலப்பாகவும் சண்டைகள் நிறைந்ததாகவும் காணப்படுகின்றது.
Listen News!