• Sep 21 2024

அடித்து நொருக்கும் விக்ரம் பட கலெக்‌ஷன் - எத்தனை கோடி தெரியுமா?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமா கவனிக்கப்படும் ஒரு இயக்குநராக மாறிவிட்டார். மாநகரம், கைதி, மாஸ்டர், இப்போது விக்ரம் என அடுத்தடுத்து வெற்றிப்படங்களை இயக்கி வருகிறார்.

மேலும் இந்த 4 படங்களும் எப்போதும் போல இரண்டு சண்டை, காதல், நடனம் என இல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக மட்டும் இயக்கி வருகின்றார்.

இப்போது அவர் இயக்கிய விக்ரம் திரைப்படம் கடந்த 3ஆம் திகதி ரிலீஸ் ஆகி மாஸ் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. சினிமா வட்டாரங்களில் விக்ரம் பட வசூலை கண்டு ஆச்சரியத்தில் உள்ளார்கள் என்றே கூறலாம்.

அதன்படி இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.இன்னும் திரையரங்குகளில் மக்கள் வெள்ளம் அலை மோதி வரும் விக்ரம் திரைப்படம் உலகளவில் வசூலை குவித்து வருகிறது. அதன்படி தற்போது விக்ரம் திரைப்படத்தின் ஒட்டுமொத்த வசூல் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.

ஆம், அதன்படி விக்ரம் திரைப்படம் தற்போது வரை மொத்தமாக ரூ. 275+ கோடிகள் வசூல் செய்துள்ளதாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement