நடிகர் விஜய் தற்போது எச். வினோத் இயக்கும் தனது 69 ஆவது படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்துடன் சினிமா துறையில் இருந்து விலகி, தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளார். இந்த படம் விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சினிமா வட்டாரத்தில் நடிகர் விஜய் - திரிஷா தொடர்பில் அவ்வப்போது பல கிசுகிசு தகவல்கள் பரவி வருகின்றன. விஜயின் பிறந்த நாளில் லிப்டில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை திரிஷா பகிர்ந்தார். இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. அதுபோல லியோ படத்தில் இடம்பெற்ற முத்தக் காட்சியும் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.
இதைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷின் திருமணத்திற்கு விஜயும் திரிஷாவும் தனியார் ஜெட் விமானத்தில் ஒன்றாக கோவா சென்றார்கள். விஜய் கீர்த்தியின் திருமணத்தில் பட்டு வேட்டி சட்டையுடன் இருந்த புகைப்படம் வெளியானது. ஆனால் திரிஷாவின் புகைப்படங்கள் ஒன்று கூட வெளியாகவில்லை. எனினும் விமான நிலையத்தில் திரிஷாவும் விஜயும் ஒன்றாகவே இறங்கினார்கள்.
d_i_a
இந்த நிலையில், த்ரிஷாவால் விஜய் செருப்படி வாங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என பத்திரிகையாளர் சேகுவாரா தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். தற்போது அவர் அளித்த பேட்டி வைரலாகி வருகின்றது.
அதில் அவர் கூறுகையில், கீர்த்தி சுரேஷின் திருமணத்திற்கு 6 பேர் உள்ள விமானத்தில் சென்றார்கள். அதில் விஜயும் திரிஷாவும் மட்டும் காரில் சென்றார்கள். இதுதான் உண்மையான விஷயம். இதை யாரும் ஊதி பெரிதாக்க இல்லை. சங்கீதாவுக்கு நடக்கும் அநியாயம் இதுதான்.
மேலும், விஜயின் பையன் வீட்டை விட்டு வெளியே போக காரணமும் இதுதான். அப்பாவை பார்க்க நிறைய நடிகைகள் வாராங்க.. இருக்காங்க... இதை பார்க்க முடியல என்று தான் விஜயின் பையன் வீட்டை விட்டு வெளியே போனார். அதைப்போல சங்கீதாவும் விஜயை பிரிந்து லண்டனில் வாழ்ந்து வருகின்றார்.
விஜய் அரசியலில் இறங்கிய பிறகும் இப்படி பண்ணுவது முகம் சுளிக்க வைத்துள்ளது. சமீபத்தில் வெளியான வீடியோவில் விஜய்யும் திரிஷாவும் ஜோடியாக இணைந்து வருகின்றார்கள். அந்த இடத்தில் விஜயின் மனைவி சங்கீதா தான் இருக்க வேண்டும் என்று சேகுவாரா தெரிவித்துள்ளார்.
Listen News!