தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்படும் முன்னணி ஹீரோவாக நடிகர் அஜித்குமார் காணப்படுகின்றார். இவர் தற்போது விடா முயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகின்றார்.
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்த விடாமுயற்சி திரைப்படம் எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதேபோல ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் மே தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளது. அன்றைய தினம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி திரைப்படமும் வெளியாக உள்ளது.
d_i_a
விடாமுயற்சி திரைப்படத்தை விட ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் குட் பேட் அக்லி படம் தொடர்பான அப்டேட்டுகள், புகைப்படங்கள் என்பன அடிக்கடி வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது.
இந்த நிலையில், குட் பேட் அக்லி படத்தில் மிகவும் இளமையான தோற்றத்தில் அஜித் நடித்துள்ள புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில் டி ஏஜிங் செய்யாமலே மிகவும் இளமையான தோற்றத்தில் அஜித் காணப்படுகிறார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அமர்க்களம் படத்தில் அஜித் இருக்கும் அதே தோற்றத்தை போல தற்போதும் காணப்படுகின்றார் என்று தமது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றார்கள். மேலும் அஜித் பிரபல தெலுங்கு நடிகரான சுனிலுடன் பேசிக் கொண்டிருக்கும் வீடியோவும் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Thank you #Ajith sir for Giving me this lifetime opportunity , DREAM FULL-FILLED . Love you so much sir ❤️🙏🏻 Last day shoot for sir💥🔥💥🔥 whata beautiful journey #GoodBadUgly ❤️😍 pic.twitter.com/kyfI3GUcnM
Listen News!