• Sep 26 2023

சூடுபிடிக்கும் அரசியல் பயணம்... மகளிர் அணியை சந்திக்கவுள்ள விஜய்... அதுவும் யார் தலைமையில் தெரியுமா..!

Prema / 2 weeks ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் ஒருபுறம் நடிப்பில் பிஸியாக இருந்தாலும், மறுபுறம் தனது அரசியல் ஆசையையும் வளர்த்து வருகிறார். அந்தவகையில் சமீபகாலமாக அவரின் மக்கள் இயக்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற செயல்பாடுகள் கூடிய விரைவில் விஜய் அரசியலில் கால் பதிப்பதற்கான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. 


அதாவது நடிகர் விஜய் தலைமையில் தான் விஜய் மக்கள் இயக்கம் செயல்பட்டு வருகிறது. அதுமட்டுமட்டுமல்லாது சமீபகாலமாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் இவர் மேற்கொண்டு வருகின்ற சந்திப்புக்களும் அரசியல் குறித்த எண்ணமாகவே பார்க்கப்படுகின்றது.


இந்நிலையில் தற்போது மற்றுமோர் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது விஜய் மக்கள் இயக்க மகளிர் அணி கூட்டம் இன்று  சென்னை அருகே உள்ள பனையூரில் உள்ள மக்கள் இயக்க தலைமை அலுவகலத்தில் நடைபெறவுள்ளது. 


இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.  அதுமட்டுமல்லாது இந்த ஆலோசனைக் கூட்டம் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் இன்று காலை 10.30 மணிக்கு நடைபெறும் என்று விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

எனவே நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் நடைபெறும் இந்தக் கூட்டம் விஜய் மக்கள் இயக்கத்தின் அரசியலிற்கான அடுத்தகட்ட நகர்வாக பார்க்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement