• Jun 26 2024

ஒரே நாளில் ரிலீஸாகும் 2 படங்கள்.. இண்டுமே பான் இந்திய படம்.. உச்சத்தில் ராஷ்மிகா மந்தனா மார்க்கெட்..!

Sivalingam / 1 week ago

Advertisement

Listen News!

நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்த இரண்டு படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆக இருப்பதாகவும் குறிப்பாக இரண்டு படங்களும் பான் இந்திய திரைப்படங்கள் என்பதால் இந்த  இரண்டு படங்களும் வெற்றி பெற்றால் ராஷ்மிகா மார்க்கெட் உச்சத்திற்கு செல்லும் என்றும் கூறப்படுகிறது.

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த ’புஷ்பா 2’ திரைப்படம் டிசம்பர் 6ஆம் தேதி வெளியாகும் என்று நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் நாயகியாக ராஷ்மிகா நடித்துள்ளார் என்பது தெரிந்தது.

இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா நடித்து வந்த பாலிவுட் திரைப்படமான ’சாவ்வா’ என்ற திரைப்படம் அதே டிசம்பர் 6ஆம் தேதி தான் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தை ராஷ்மிகா மந்தனா மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கிறார் என்பதும் இந்த படம் பான் இந்திய படமாக இந்தியா முழுவதும் டிசம்பர் 6ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



எனவே டிசம்பர் 6ஆம் தேதி ராஷ்மிகா மந்தனாவுக்கு இரண்டு படங்கள் வெளியாக இருப்பதை அடுத்து இந்த இரண்டு படங்களும் வெற்றி பெற்றால் அவர் அகில இந்திய அளவில் உச்ச நட்சத்திர பட்டியலில் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே தற்போது அவர் நயன்தாராவை விட அதிக சம்பளம் ஆகும் நடிகையாக தென்னிந்திய அளவில்  இருந்து வரும் நிலையில் அடுத்ததாக அவர் பாலிவுட்டின் முன்னணி நடிகையாக மாறுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.


Advertisement

Advertisement