• Jan 19 2025

நீங்க செய்ய நினைச்சா நேரடியா வந்து செய்யுங்க..! SJ சூர்யாவிற்கு ஸ்ட்ரிக்ட்டாக சொன்ன மாஸ்டர்

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் காணப்படுபவர் தான் ராகவா லாரன்ஸ். இவர் எண்ணற்ற உதவிகளை மக்களுக்கு செய்து வருகின்றார். இதனாலே மக்கள் மத்தியில் மிகவும் மதிக்க பட்ட ஒருவராக காணப்படுகின்றார்.

அனேகமாக இவர் இயக்கும் படங்களில் மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் ஆகியோருக்கு முக்கிய கேரக்டர்கள் கொடுத்து அவர்களையும் படங்களில்  நடிக்க வைத்திருப்பார். இது  பலருக்கு  உதாரணமாக காணப்படுகின்றது.

தற்போது ராகவா லாரன்ஸ் ஆரம்பித்த மாற்றம் என்ற செயல் திட்டத்தின் ஊடாக பலர் அதில் பங்கு வகிப்பதற்காக தம்மால் இயன்ற உதவிகளை நேரடியாகவே செய்து வருகின்றார்கள்.


இந்த நிலையிலே, எஸ்.கே சூர்யாவும் ராகவா லாரன்ஸ் ஆரம்பித்த மாற்றம் என்ற செயல் திட்டத்தின் ஊடாக உதவி செய்வதற்கு முன் வந்துள்ளார். 

இதன் போது அவர் கூறுகையில், நான் மாற்றத்தில் இணையும்போது எனது பணத்தை ராகவா லாரன்ஸ் இன் கணக்கில் அனுப்பி விடுகின்றேன். அதன் மூலமாக நீங்கள் செய்யுங்கள் என்று கூறினேன். அதற்கு மாஸ்டர் சொன்னாரு இந்த மாற்றம் என்ற அமைப்புக்கு பேங்க் அக்கௌன்ட், கஜானாவோ எதுவும் கிடையாது. நீங்கள் செய்ய நினைக்கும் உதவியை உங்கள் கையால் நீங்களே வந்து செய்யுங்கள் என்று கூறினார். அவர் அப்படி சொன்னது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது என்று கூறியுள்ளார்.

Advertisement

Advertisement