• Jul 16 2024

’குட்நைட்’ இயக்குனருக்கு கல்யாணம்.. வாழ்த்தி தங்கச்செயின் போட்ட பிரபல நடிகர்..!

Sivalingam / 4 weeks ago

Advertisement

Listen News!

மணிகண்டன் நடித்த ’குட்நைட்’படத்தின் இயக்குனருக்கு நேற்று திருமணம் நடந்த நிலையில் பிரபல நடிகர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து தங்கச் செயின் பரிசாக அளித்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

மணிகண்டன், மீரா ரகுநாத் நடிப்பில் உருவான ’குட்நைட்’ திரைப்படம் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படத்தை விநாயக் சந்திரசேகரன் என்பவர் இயக்கிய நிலையில் அவருக்கு நேற்று திருமணம் நடந்தது.

’குட்நைட்’ படத்தின் குழுவினர் அனைவரும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் சர்ப்ரைஸ் ஆக விநாயக் சந்திரசேகரன் திருமணத்தில் கலந்து கொண்டு தம்பதிகளுக்கு வாழ்த்து கூறி தங்க சங்கிலி ஒன்றை இயக்குனரின் கழுத்தில் அணிவித்து பரிசாக அளித்தார். இது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஏற்கனவே விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளி வந்து கொண்டிருக்கும் நிலையில் தங்கச் சங்கிலி மூலம் இந்த வெற்றி கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளதாக திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன.


Advertisement

Advertisement