• Jun 22 2025

அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு.. ஒரேயடியா தள்ளி போயிருச்சு..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

அல்லு அர்ஜுன் நடித்த ’புஷ்பா 2’ திரைப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது இந்த படத்தின் புதிய ரிலீஸ் தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

அல்லு அர்ஜுன் நடித்த ’புஷ்பா’ திரைப்படம் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் குறிப்பாக கிராபிக்ஸ் பணிகள் தாமதம் காரணமாக தான் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போனதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கிராபிக்ஸ் பணிகள் தாமதம் காரணமாக இந்த படத்தில் ரிலீஸ் தேதி தள்ளிப் போவதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் தற்போது இந்த படம் டிசம்பர் 6ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே ஆகஸ்ட் 15ஆம் தேதி ’தங்கலான்’ உள்பட ஒரு சில படங்களை ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீசாகும் படங்கள் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement