• Jul 23 2024

சூர்யாவுக்கு பதில் சூரியா? ’வாடிவாசல்’ படத்தை அடுத்து இன்னொரு இயக்குநரின் குழப்பம்..!

Sivalingam / 1 month ago

Advertisement

Listen News!

ஜிவி பிரகாஷ் நடித்த ’புரூஸ்லீ’ மற்றும் விமல் நடித்த ’விலங்கு’ ஆகிய படங்களை இயக்கிய பிரசாந்த் பாண்டிராஜ் அடுத்ததாக சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க இருக்கிறார் என்று நேற்று செய்தி வெளியான நிலையில் தற்போது சூர்யா அல்ல சூரி என்று வெளிவந்து கொண்டிருக்கும் தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகர் சூர்யா தற்போது ’கங்குவா’ என்ற படத்தை முடித்துவிட்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ’சூர்யா 44’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அந்தமானில் நடைபெற்று வரும் நிலையில் அடுத்ததாக அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ திரைப்படத்தில் நடிப்பார் என்று கூறப்பட்டது.

ஆனால் நேற்று திடீர் என இயக்குனர் பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் சூர்யா நடிக்க இருக்கிறார் என்றும் இந்த படத்தை முடித்துவிட்டு தான் அவர் ’வாடிவாசல்’ படத்திற்கு செல்ல இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் தற்போது பிரசாந்த் பாண்டிராஜ் தரப்பிலிருந்து வந்த தகவலின் படி அவரது அடுத்த படத்தில் சூர்யா நடிக்கவில்லை என்றும் சூரி தான் நடிக்க இருப்பதாகவும் கூறியிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதனால் பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில் நடிப்பது சூர்யாவா? அல்லது சூரியா? என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே ’வாடிவாசல்’ திரைப்படத்தில் சூர்யா நடிக்கவில்லை என்று கூறிய நிலையில் சூர்யாவுக்கு பதில் சூரி தான் அந்த படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. தற்போது அதே குழப்பம் இன்னொரு படத்திலும் வந்திருக்கும் நிலையில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளி வந்தால் மட்டுமே அந்த படத்தில் நடிப்பது சூர்யாவா? அல்லது சூரியா? என்பது தெரியவரும்.

Advertisement

Advertisement