• Jan 19 2025

விஜய்யின் முடிவுக்கு திடீர் எதிர்ப்பு.. தெருவில் இறங்கி போராடும் ரசிகர்கள்.. என்ன நடந்தது?

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் தற்போது ’கோட்’ திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர் ’தளபதி 69’ படத்துடன்  திரையுலகில் இருந்து விலகுவதாகவும் இதுதான் அவரது கடைசி படம் என்றும் கூறப்பட்டது. ’தளபதி 69’ படத்தை முடித்தவுடன் அவர் முழு நேர அரசியலில் இறங்க போவதாகவும் ஒருவேளை அரசியலில் வெற்றி பெற்று விட்டால் அவர் இனிமேல் திரைப்படம் நடிக்க வாய்ப்பு இல்லை என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது ’தளபதி 69’ படமும் கிட்டத்தட்ட ட்ராப் என்று செய்திகள் வெளிவந்து கொண்டிருப்பதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ’கோட்’ படத்தை முடித்தவுடன் விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட போவதாகவும் மதுரையில் மாநாடு மற்றும் மாநில முழுவதும் சுற்றுப்பயணம், கட்சியின் கொள்கை அறிவிப்பு, உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட பல பணிகள் இருப்பதால் இன்னொரு படம் நடித்தால் 2026 ஆம் ஆண்டு தேர்தலை சந்திப்பதில் சிக்கல் ஏற்படும் என்றும் அதனால் ’கோட்’ படத்தை முடித்துவிட்டு விஜய் சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபட இருப்பதாக கூறப்படுகிறது.



இந்த நிலையில் தான் ரசிகர்கள் இந்த செய்தியை கேள்விப்பட்டு தெருவில் உள்ள சுவர்களில் ’தளபதி 69’ படம் தங்களுக்கு கண்டிப்பாக வேண்டும் என்று கோரிக்கை விடுத்து பேனர்களை பதிவு செய்து வருகின்றனர்.

சினிமாவில் இருந்து தயவுசெய்து வெளியேற வேண்டாம் என்றும் ’தளபதி 69’ படத்திற்காக நாங்கள் வெயிட்டிங் என்றும் சுவர்களில் விஜய் ரசிகர்கள் எழுதி கிட்டத்தட்ட ஒரு அமைதி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த தகவல் விஜய்யின் கவனத்திற்கு செல்லுமா? அவர் என்ன முடிவு எடுப்பார்? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement

Advertisement