தமிழ் திரையுலகில் அனைவராலும் அறியப்பட்ட நடிகை பிரியா ஆனந்த் ஒரு மாடலாக தொழில் துறையில் அறிமுகமானார்.2009 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படமான வாமனன் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார்.

தொடர்ந்து 2010 ஆம் ஆண்டு லீடர் திரைப்படம் மூலம் தெலுங்கிலும் அறிமுகமானார்.தற்போது தமிழ், தெலுங்கு , இந்தி , கன்னடம் மற்றும் மலையாள படங்கள் என இந்திய மொழி படங்களில் நடித்துவரும் பிரியா ஆனந்த் இந்திய அளவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

இந்நிலையில் அண்மையில் திருமண நிகழ்வொன்றில் கலந்து கொண்ட நடிகை பிரியா ஆனந்த் இளம் சிவப்பு நிற அகல போடருடன் கூடிய வெள்ளை மற்றும் கோல்டன் புடவையில் இருந்த புகைப்படங்களை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.இதை பார்த்த அவரது ரசிகர்கள் மணப்பெண்னே பொறாமைபடுவார் என கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.
                             
                            
                            
                            
                                                    
                                                    
                                            
                                            
                                            
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                
                
                
                
                
Listen News!