• Apr 29 2024

ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் விஜய். நடித்துள்ளாரா?. அட ஆமாங்க..வெளிவந்த வைரல் வீடியோ இதோ!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் சூப்பர்ஸ்டார் என்று கொண்டாடப்படும் ஒரே ஒரு நடிகர் ரஜினிகாந்த். இவர் தமிழில் பல படங்களை நடித்து கொடுத்திருக்கிறார்.மக்கள் மனதில் எப்போவும் நீங்காத இடம் பிடித்துள்ளார்.இவர் நடிப்பில் தற்போது ஜெயிலர் படம் உருவாகி வருகிறது.

 இயக்குநர் நெல்சன் இயக்கிய பீஸ்ட் திரைப்படம் மோசமான விமசனங்களை பெற்றதால், கண்டிப்பாக ஜெயிலர் படத்தின் மூலம் முழுமையான வெற்றியை கொடுக்க வேண்டும் என்று கடுமையாக முயற்சி செய்து வருகிறாராம்.

ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தை தொடர்ந்து தன்னுடைய மகள் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளார் ரஜினி. இப்படத்திற்காக 7 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளாராம்.லால் சலாம் படத்தை முடித்தபின் லைக்கா தயாரிப்பில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் இயக்குநர் யார் என்பதை விரைவில் படக்குழுவே அறிவிக்கும் என்று சொல்லப்படுகிறது.

ரஜினிகாந்தின் தீவிர ரசிகர்களில் ஒருவர் தளபதி விஜய் என்பதை நாம் அறிவோம். அதை விஜய்யும் பல மேடையில் கூறியுள்ளார்.

இந்நிலையில், ரஜினிகாந்தின் சூப்பர்ஹிட் திரைப்படம் ஒன்றில் விஜய் நடித்துள்ளார். ஆம், விஜய்யின் தந்தையும் பிரபல இயக்குனராக எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் 1985ல் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த படம் தாம் நான் சிகப்பு மனிதன். அப்படத்தில் இடம்பெறும் ஆரம்பக் காட்சி ஒன்றில் விஜய் நடித்திருப்பார்.

 இந்த காட்சியில் விஜய் தோன்றியதை கவனித்திருக்க முடியாது. ஆனால், பலரும் தற்போது விஜய் தோன்றிய அந்த காட்சியை ரசிகர்கள் சமுக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.


Advertisement

Advertisement

Advertisement