• Jan 15 2025

’கோட்’ டிரைலர் ரிலீஸ் தேதி திடீர் மாற்றம்? காரணம் உதயநிதியா? தயாரிப்பாளரா?

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடித்த ’கோட்’ திரைப்படத்தின் டிரைலர் ஆகஸ்ட் 19ஆம் தேதி வெளியாகும் என செய்திகள் வெளியான நிலையில் திடீரென தற்போது இந்த திரைப்படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான ’கோட்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பு பெறவில்லை என்பது தயாரிப்பு தரப்புக்கு பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பாடல்களில் விட்டதை ட்ரைலரில் பிடிக்க வேண்டும் என்று வெங்கட் பிரபுவுக்கு தயாரிப்பு தரப்பு நெருக்கடி கொடுத்துள்ளதாகவும் எனவே டிரைலரில் படத்தில் உள்ள அனைத்து முக்கிய விஷயங்களும்  இருக்க வேண்டும் என்றும் டிரைலரை பார்த்த உடனே படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவல் ரசிகர்களுக்கு ஏற்பட வேண்டும் என்று வெங்கட் பிரபுக்கு நெருக்கடி கொடுத்துள்ளதாக தெரிகிறது.



இந்த நிலையில் தான் ஆகஸ்ட் 19ஆம் தேதி டிரெய்லர் ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்ட நிலையில் அதே தேதியில் தான் அமைச்சர் உதயநிதி துணை முதல்வராக பதவி ஏற்பார் என்றும் கூறப்படுவதால் டிரெய்லர் ரிலீஸ் தேதியை மாற்ற வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

உதயநிதி துணை முதல்வர் ஆனால், அந்த செய்திக்கு தான் ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்கும் என்பதால் டிரெய்லர் திரைப்படத்தின் டிரைலர் செய்தி பின்னுக்கு தள்ளப்பட்டு விடும் என்பதால் ஆகஸ்ட் 15ஆம் தேதி டிரைலரை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement