• Sep 22 2023

'ப்ரண்ட்ஸ்' பட இயக்குநர் சித்திக் மறைவிற்கு.. விஜய் இரங்கல் தெரிவிக்கவில்லையா..? காரணம் என்ன..? வெளியானது உண்மை..!

Prema / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் என்றுமே மறக்க முடியாத இயக்குநர்களில் ஒருவர் சித்திக். இவர் தமிழில் 'ப்ரண்ட்ஸ், எங்கள் அண்ணா, காவலன், சாது மிரண்டா, பாஸ்கர் ஒரு ராஸ்கல்' போன்ற படங்களை இயக்கியுள்ளார். அதிலும் குறிப்பாக நடிகர் விஜய், சூர்யா, வடிவேலு, ராதாரவி, தேவயாணி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இவரது 'ப்ரண்ட்ஸ்' திரைப்படம் இன்றும் ரசிகர்களால் பெருமளவில் கொண்டாடப்படும் திரைப்படமாக இருந்து வருகிறது.


இந்நிலையில் சமீபத்தில் சித்திக் சிறுநீரகப் பிரச்னையின் காரணமாக கேரளா கொச்சியிலுள்ள அமிர்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சையிலிருந்த அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருந்தார்.

இவரது மறைவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இவரின் இறப்பைத் தொடர்ந்து திரைப் பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலினைத் தெரிவித்திருந்தனர். ஆனால் நடிகர் விஜய் மட்டும் சித்திக்கின் மறைவுக்கு நேரில் சென்றோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிக்கவில்லை என பலரும் விமர்சித்து வந்திருந்தனர்.


இந்நிலையில் தற்போது ஒரு தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது விஜய் சித்திக் குடும்பத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாது சித்திக் மறைவின்போது விஜய் வெளியூரில் இருந்தாகவும் அதனால் தான் அவரால் வர முடியவில்லை எனவும் விஜய் தன்னுடைய வருத்தத்தை தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement